Ind vs Eng Toss: இரு அணிகளிலும் மாற்றம் மட்டும் மாறவில்லை..! இங்கிலாந்து பவுலிங் தேர்வு - சாதனை நோக்கி கோலி
இரு அணிகளிலும் மாற்றம் மட்டும் மாறவில்லை. கடந்த போட்டியில் விளையாடி அதே வெற்றி கூட்டணியுடன் களமிறங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து வரும் கோலி, இன்று அதை செய்தால் சாதனை புரிவார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கயானாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அணியாக உள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இதே இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை தழுவி இந்தியா வெளியேறியது. எனவே இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் போட்டியாகவும் இந்த அரையிறுதி அமைகிறது.
இந்தியா பவுலிங்
மழையால் மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை தாமதமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறது.
"மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் முதலில் பவுலிங் செய்வது சாதகமான விஷயம்" என்று டாஸ் வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் கூறியுள்ளார்.