தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suriya : கள்ளக்குறிச்சி மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது.. மக்கள் நலம் சார்ந்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும் - சூர்யா

Suriya : கள்ளக்குறிச்சி மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது.. மக்கள் நலம் சார்ந்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும் - சூர்யா

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 21, 2024 03:04 PM IST

Suriya : "ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

கள்ளக்குறிச்சி மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது - மக்கள் நலம் சார்ந்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும் சூர்யா
கள்ளக்குறிச்சி மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது - மக்கள் நலம் சார்ந்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும் சூர்யா

Suriya : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

"ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.