Girl Baby Names : ‘கா’ நெடில் அல்ல, ‘க’ குறில்; இந்த எழுத்தில் பெண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் இதோ!
Girl Baby Names : ‘கா’ நெடில் அல்ல, ‘க’ குறில்; இந்த எழுத்தில் பெண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் இதோ!
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்
இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும். அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
உங்கள் அழகிய பெண் குழந்தைகளுக்கு ‘க’ என்ற எழுத்தில் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கண்மணி
கண்மணி என்றால் கண்ணில் உள்ள கருவிழி என்று பொருள். உங்கள் குழந்தை உங்களுக்கு கண்ணின் கருவிழியைப்போல் காக்கப்படவேண்டியவர் என்பதை இந்தப்பெயர் உணர்த்துகிறது. கண்களைப்போன்ற மதிப்புமிக்கவள் என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
கண்மதி
கண்மதி என்ற பெயரை மிருகசிரீஷம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வைக்கலாம். இவர்கள் தலைமைப்பண்வுடன் இருப்பார்கள். சுதந்திரமானவர்களாக, கிரியேட்டிவானவர்களாக, தைரியமானவர்களாக, எதிலும் முன்னிற்பவர்களாக, அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
கதிர்
கதிர் என்றால், சூரியனின் கதிர் என்று பொருள். சூரிய ஒளியைப்போல் பிரகசமாகவும், ஒளியுடனும் மிளிர்வார்கள். சூரிய கதிர்களைப்போல் இதமாகவும், எரிச்சலாகவும் தேவைக்கு ஏற்ப இருப்பார்கள் என்று பொருள்.
கதிரழகி
கதிரழகி என்றால், சூரியனின் கதிர் மற்றும் அழகானவர் என்று பொருள். இவர்கள் சூரிய கதிர்களைப் போல் பிரகாசமானவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்கள் என்று பொருள்.
கதிர்ச்செல்வி
கதிர் என்றால் ஒளி பொருந்திய, அதிகமான, பயிர் என்று பொருள். செல்வி என்றால் செல்வம், அன்பானவள், மகிழ்ச்சி என பல அர்த்தங்களைத்தரும். எனவே இந்தப்பெயர் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள்.
கனல்
கனல் என்றால் ஒளி, மிளிர்கிற, அறிவான, புத்திசாலியான, பொன்னிறம் என எண்ணற்ற அர்த்தங்களைத்தரும். இந்தப்பெயரைக்கொண்டவர்கள் ஆற்றல், அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். கனல் கண்ணன் என ஆண்பாலுக்கும், கனல் கண்ணி என பெண் பாலுக்கும் பெயர் வைக்கலாம்.
கனிமதி
கனிமதி என்ற பெயர் கொண்டவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இயங்க விரும்புவார்கள். சிறந்த நபராகவும், மதிக்கப்படுபராகவும் இருப்பார்கள். விரைவாகவும், கிரியேட்டிவாகவும் சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். வாய்ப்புகளை தவறவிடாதவர்களாக இருப்பார்கள். பயண விரும்பியாவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
கனியமுது
கனியமுது என்ற பெயர் கொண்டவர்கள் ஏழைகளுக்கு இலவசமாக அனைத்தையும் வழங்குபவர்களாக இருப்பார்கள். இந்தப்பெயரை அழைப்பதற்கும் இதமாக இருக்கும்.
கனிகா
கனிகா என்ற பெயர் கொண்டவர்கள் எதிர்காலத்தை சிறப்பாக தேர்ந்தெடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் நல்ல பார்ட்னராகவும் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல பார்ட்னரும் கிடைப்பார்கள். வாழ்வில் பெருவெற்றி பெருவார்கள்.
கனிமொழி
கனிமொழி என்றால் அன்பானவர் என்று பொருள். உங்கள் குழந்தை அன்பானவராக இருப்பார் என்பது இதன் பொருள். இந்தப்பெயரைக்கொண்ட குழந்தைகள் அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்பவராக இருப்பார்கள்.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்