Relationship : ப்ளீஸ் இதை செய்யாதீங்க! உங்கள் மன அமைதியைக் கெடுக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
- Relationship : ப்ளீஸ் இதை செய்யாதீங்க! உங்கள் மன அமைதியைக் கெடுக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
- Relationship : ப்ளீஸ் இதை செய்யாதீங்க! உங்கள் மன அமைதியைக் கெடுக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
(1 / 10)
உங்கள் மனஅமைதியைக் கெடுக்கும் முக்கிய பழக்கங்கள் நீங்கள் எப்போதும் வியந்தது உண்டா? நீங்கள் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா, தியானம், மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களைப் பின்பற்றியும் உங்களின் மனஅமைதி குலைந்தது உண்டா? பயத்துடன் வாழ்கிறீர்களா? பதற்றத்துடன் இருக்கிறீர்களா? ஏதேனும் உங்கள் மனதை பாதித்தது உண்டா? எனில் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று எண்ணியது உண்டா? இவைதான் அதற்கு காரணங்கள். எனவே இவற்றைக் களைய முயற்சியுங்கள்.
(2 / 10)
அதிகம் டிஜிட்டலில் மூழ்கிக்கிடப்பது டிஜிட்டல் டிவைஸ்களில் அதிகம் மூழ்கிக்கிடப்பதும் உங்கள் மனஅமைதியைக் கொல்லும் ஒரு விஷயம் ஆகும். நீங்கள் டிஜிட்டல் மீடியா அல்லது சமூக வலைதளங்களில் எதிர்மறை செய்திகளை பார்த்தீர்கள் என்றால், அது உங்களின் மனஅமைதியைக் கெடுக்கிறது. அது உங்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது.
(3 / 10)
உணர்வு ரீதியான பிரச்னைகள் உங்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தாமல், அவற்றை தேக்கி வைத்துக்கொண்டால், அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களின் மனஅமைதி பாதிக்கப்படுகிறது. நீங்கள் உணர்வு ரீதியாக சிக்கிக்கொள்கிறீர்கள். எனவே இதுவும் உங்கள் மனஅமைதியின்மைக்கு காரணமாகிறது.
(4 / 10)
அடுத்தவர்களுக்காக யோசிப்பது தொடர்ந்து ஒப்புக்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது அல்லது மற்றவர்கள மனது புண்படும் என யோசிப்பது, உங்களை பல்வேறு பிரச்னைகளுக்கு அழைத்துச்செல்லும். மேலும் அது உங்கள் பயம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். உங்களை வெளிப்படுத்துவதை தடுத்தால் உங்கள் மனஅமைதியைக் குலைக்கும்.
(5 / 10)
அக்கறையற்ற நுகர்வு எவ்வித அக்கறையுமின்றி ஷாப்பிங் செய்வது, சாப்பிடுவது மற்றும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களை குற்றவுணர்வுக்கும், திருப்தியின்மைக்கும் அழைத்துச்செல்லும். இதனால் நீங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடம். எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
(6 / 10)
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ்வது உங்கள் கடந்த காலத்தை எண்ணி வருந்துவது அல்லது மகிழ்ந்திருப்பது, கடந்த கால சிந்தனைகளிலே மூழ்கிக்கிடப்பது அல்லது எதிர்காலத்தைக் குறித்து கற்பனை செய்துகொண்டிருப்பது, உங்களின் நிகழ்கால அனுபவங்களை தவிர்ப்பது, மகிழ்ச்சியை புறக்கணிப்பது என்று இருந்தால், உங்களால் மகிழ்ந்திருக்க முடியாது. மனஅமைதி குலையும்.
(7 / 10)
தோல்வி பயம் தோற்றுவிடுவோமோ என்ற பயத்திலே புதிய விஷயங்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது, புதிய சவால்களை எதிர்கொள்ள தயங்குவது என உங்களின் தனிப்பட்ட வளர்ச்சியை சிதைக்கும் ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள தயங்குவது உங்களை சிக்கலில் மாட்டிவிடும். மனஅமைதியைக் குலைக்கும்.
(8 / 10)
அதிக பொறுப்புகள் உங்கள் அனுபவம் மற்றும் பலத்தை கடந்த பொறுப்புக்களை ஏற்பது அல்லது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உங்களுக்கு துன்பத்தை தரும் செயல்கள் ஆகும். அவை உங்களுக்கு அனைத்தும் அதிகப்படியான ஒரு உணர்வைக்கொடுத்து உங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
(9 / 10)
மற்றவர்களிடம் பர்ஃபெக்ட்டாக இருக்கவேண்டும் என எண்ணுவது
மற்றவர்கள் அதிகப்படியாக சரியாக இருக்கவேண்டும். அனைத்தையும் சரியாகச் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது, இதனால் உங்களுக்கு ஏமாற்றமும், உறவுகளும் வற்றிவிடும். இது உங்கள் மனநிம்மதியைக் குலைக்கும் செயல். இதனால உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும்.
(10 / 10)
உறுதி குறைவு உங்கள் தேவைகள் மற்றும் எல்லைகளை நீங்கள் தெளிவாக கூறாமல் விட்டுவிட்டால், அது உங்கள் உறவில் மனக்கசப்புக்களை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் பலமிழந்தவர்களாக மாறுவீர்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் அலுவல உறவுகளில் பாதிப்புக்கள் ஏற்படும். எனவே நீங்கள் உறுதியாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.
மற்ற கேலரிக்கள்