Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!-boy baby names here is a collection of meaningful names for your baby boys that start with the letter k - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!

Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!

Priyadarshini R HT Tamil
Sep 02, 2024 04:11 PM IST

Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!
Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!

உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்காக ‘க’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

கங்கைகொண்டான்

கங்கைகொண்டான் என்பது சோழ மன்னர் முதலாம் ராஜேந்திரனின் அடையாளம். அதாவது போரில் வெற்றியிட்டு கங்கையை அடைந்தவர் என்று பொருள். உங்கள் குழந்தைக்கு வரலாற்று சிறப்புமிக்க பெயரை வைக்க விரும்பினால் அவர்களுக்கு இந்தப்பெயரை வைக்கலாம்.

கடம்பன்

கடம்பன் என்பது முருகக்கடவுளின் பெயர் ஆகும். முருகனுக்கு உள்ள எண்ணற்ற பெயர்களுள் ஒன்றாகும். இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வைத்தால் அவர்கள் இறைவனின் முருகனின் அருளைப் பெறுவார்கள்.

கடற்கோ

கடற்கோ என்றால் ஆழ்ந்த பரந்த மனப்பான்மை கொண்டவர் என்று பொருள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய தனிமையை விரும்புவார்கள். எண்ணற்ற தனித்திறமைகள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடலரசன்

கடலுக்கு அரசன் என்ற பொருளைத்தரும் இந்தப்பெயர் கொண்டவர்கள், நிலையான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இரக்க குணம், கலைத்துவம், நம்பிக்கையான, அன்பானவராகவும், குடும்பத்தை விரும்புபவராகவும் இருப்பார்கள்.

கணியன் பூங்குன்றன்

யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாறா என்ற தத்துவத்தையும், வாழ்க்கை பாடத்தையும் கூறிய தமிழ் புலவர் ஆவார். கணியன் என்றால் கணிதம் என்று பொருள். காலத்தை கணிப்பவர், ஜோதிடத்தை கணிப்பவர் என்று பொருள்கொள்ளலாம். இந்தப்பெயர் வரலாற்று சிறப்புமிக்க பெயராகும்.

கண்மணியன்

கண்மணியன், கண்ணில் உள்ள கருவிழியைப்போன்ற மதிப்புமிக்கவன் உங்கள் மகன் என்று பொருள். எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகள் புரிவார் என்பதையும் குறிக்கிறது.

காளிதாசன்

காளிதாசன் என்ற பெயரைக் கொண்டவர் கடும் உழைப்பாளியாக இருப்பார். தன்னம்பிக்கை கொண்டவராகவும், அதே நேரத்தில் நம்பிக்கையானவராகவும் இருப்பார். சுய ஒழுக்கம் நிறைந்தவராக இருப்பார். எதார்த்தவாதியாகவும், நற்சிந்தனைகளைக் கொண்டவராகவும் இருப்பார்.

கதிர்

கதிர் என்றால் சூரியனின் ஒளி. இது இருபாலருக்கும் பொருந்தும் பெயர். சூரிய ஒளியைப்போல் பிரகாசமானவர். வாழ்வில் ஒளி பரப்புபவர் என்று பொருள்.

கதிரொளி

கதிரொளி என்றால் சூரியனின் ஒளியைப்போல் பிரகாசமானவர். வானில் எத்தனையோ இருந்தாலும் சூரிய ஒளியே பிரதனமானதாக உள்ளதுபோல், எத்தனை பேர்கொண்ட சபையில் உங்கள் மகன் தனித்து தெரிவார் என்பதைக் குறிக்கிறது.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.