Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? இத செய்ங்க!-girl baby names do you want your children to shine like stars in life do this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? இத செய்ங்க!

Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? இத செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2024 03:29 PM IST

Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்.

Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? இத செய்ங்க!
Girl Baby Names : உங்கள் குழந்தைகள் வாழ்வில் நட்சத்திரங்களைப்போல் ஜொலிக்கவேண்டுமா? இத செய்ங்க!

அனாயா

அனாயா என்றால், கருணை மற்றும் இரக்கம் என்று பொருள். இது சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர். இது அஸ்வினி நட்சத்திரத்தை குறிக்கும் பெயர். இது புதிய துவக்கம் மற்றும் மீண்டெழுவதை குறிக்கிறது. இது இதம் மற்றும் கருணையை குறிக்கும் பெயர். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குணங்கள் இருக்கும்.

ஆர்யா

ஆர்யா என்றால் நேர்மையான, மரியாதைக்குரிய என்று பொருள். இந்தப்பெயரை இருபாலருக்கும் வைக்கலாம். இது பரணி நட்சத்திரத்தில் இருந்து பெறப்பட்ட பெயர். இந்தத் பெயர் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. இது பலம் மற்றும் நேர்மையை சுட்டிக்காட்டுகிறது.

வீரஜ்

வீரஜ் என்றால், பளபளக்கும், புத்திசாலி என்று பொருள். இந்தப்பெயர் கிருத்திகை நட்சத்திரத்துடன் தொடர்புடையது. இது ஒளி மற்றும் தெளிவைக்காட்டுகிறது. இந்தப்பெயர் பிரகாசமான மற்றும் வழிகாட்டி என்பதைக் குறிக்கிறது.

அதிதி

அதிதி என்றால் எல்லையற்ற அல்லது எல்லையில்லாத என்று பொருள். இது ரோஹினி நட்சத்திரத்துடன் தொடர்புடையது. இந்தப்பெயர் கொண்டவர்கள் அதிக கிரியேட்டிவிட்டி கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு அதிகப்படியான மற்றும் தெய்வீத்தாய் என்று பொருள்.

இஷா

இஷா என்றால், பெண் தெய்வம், முதன்மை ஆட்சியாளர் என்று பொருள். இந்தப்பெயர் மிருகசிரிசம் நட்சத்திரத்துடன் தொடர்புடையது. இது ஞானத்தை தேடுபவர் மற்றும் தெய்வீக வழிகாட்டி மற்றும் தெய்வீக பலம் என்பதை குறிக்கிறது.

ஆரவ்

ஆரவ் என்றால் ஒளிர்கிற மற்றும் அமைதியான என்று பொருள். இது புணர்பூசம் நட்சத்திரத்துடன் தொடர்கொண்ட பெயர். இது நேர்மறை எண்ணம் மற்றும் புதுமையை குறிக்கிறது. இந்தப்பெயர் அமைதி, பிரகாசமான, புதுப்பிப்பு ஆகிய அர்த்தங்களைத்தருகிறது. இரக்கம், கருணை போன்ற அர்த்தங்களையும் தருகிறது.

மீரா

மீரா என்பது கமல் மற்றும் பெருங்கடல் என்ற அர்த்தத்தை தருகிறது. இது அவிட்டம் என்ற நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது. இதற்கு அன்பு, ஆதரவு ஆகிய அர்த்தங்களும் உள்ளது.

சித்தார்த்

சித்தார்த் என்றால், இலக்குகளை எட்டிப்பிடிப்பவர் என்று பொருள். சாதனையாளர், கிரியேட்டிவானவர், வெற்றியுடன் தொடர்புகொண்ட பெயர். இது முழுமையைக் குறிக்கும்.

கிரண்

கிரண் என்றால், ஒளி அல்லது வெளிச்சம் என்று பொருள். சூரிய ஒளி என்று பெயர். வழிகாட்டுபவர், வாழ்வின் வழிகாட்டி, பிரகாசம், தெளிவு ஆகியவற்றை இந்தப்பெயர் குறிக்கிறது.

லாவண்யா

லாவண்யா என்றால் கருணை மற்றும் அழகு என்று பொருள். இது திறமை, மிளிர்வு என்ற அர்த்தங்களையும் குறிக்கிறது.

வன்யா

வன்யா என்றால் கருணை அல்லது வனம் அதாவது காடு என்று பொருள். இது சுதந்திரம் மற்றும் நளினம் ஆகியவற்றை குறிக்கிறது. இந்தப்பெயர் இயற்கை மற்றும் கருணை, இயற்கையுடன் இணைந்து வாழ்வது ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

நீலம்

நீலம் என்பது நீலக்கல்லைக் குறிக்கும் பெயர். இது பலம் மற்றும் செல்வச்செழிப்பை குறிக்கிறது. இது அழகு மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது.

அன்வி

அன்வி என்றால் அறிவாளி, புனிதமானவர் என்பதை குறிக்கிறது. தெய்வீகமானவர், புத்திசாலி ஆகியவற்றை குறிப்பிடும் பெயர். இந்தப்பெயர் ஞானம் மற்றும் தெய்வீக குணங்களுடன் தொடர்புடையது.

சான்யா

சான்யா என்றால் மின்னும், ஒளிரும், சிறப்பானவர். இவர்களிடம் சிறப்பான திறன்கள் இருக்கும் என்பதை இந்தப்பெயர் குறிக்கும். இதற்கு பிரகாசமான மற்றும் ஒளிரும் என்று பொருள்.

ஜெய்

ஜெய் என்றால் வெற்றி என்று பொருள். இதற்கு வலுவான மற்றும் ஒளிரும் என்ற அர்த்தமும் உள்ளது. மீண்டெழும் திறன், வெற்றி சூடும் நபர் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

கவி

கவி என்றால் கவிஞர் மற்றும் ஞானம் என்று பொருள். அறிவாளி என்ற அர்த்தத்தை தரும் பெயர். இது அறிவாற்றல் நிறைந்தவர் என்பதை குறிக்கிறது. கிரியேட்டிவானவர் என்பது இதன் பொருளாகும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.