தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Selvaragavan: “தயவு செஞ்சு தம்பிய நல்லா பாத்துக்கோங்க..கொஞ்சம் கூட இரக்கம்…” -செல்வராகவன்!

Selvaragavan: “தயவு செஞ்சு தம்பிய நல்லா பாத்துக்கோங்க..கொஞ்சம் கூட இரக்கம்…” -செல்வராகவன்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 07, 2024 02:15 PM IST

Selvaragavan: உங்களுக்கு சிறுவயதில் தம்பி இருந்தால், தயவு செய்து நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காரணம், பின்னாளில் அவர்கள் பெரிய ஆளாக வந்து உங்களை இம்சிக்க வாய்ப்பு இருக்கிறது. - செல்வராகவன்!

Selvaragavan: “தயவு செஞ்சு தம்பிய நல்லா பாத்துக்கோங்க..கொஞ்சம் கூட இரக்கம்…” -செல்வராகவன்!
Selvaragavan: “தயவு செஞ்சு தம்பிய நல்லா பாத்துக்கோங்க..கொஞ்சம் கூட இரக்கம்…” -செல்வராகவன்!

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் செல்வராகவன்," அப்போதிலிருந்தே ரஹ்மான் சாருக்கு நான் வெறித்தனமான ரசிகர். அவர் கடலில் குதி என்று சொன்னால் கூட நான் குதித்து விடுவேன். அவர் கடவுள் இந்த உலகத்திற்கு கொடுத்த குழந்தை. அவர் எப்படி ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பதைப் பார்த்து நான் பிரமித்து போயிருக்கிறேன்.

தம்பி இருந்தால் ஒழுங்காக பார்த்துக்கொள்ளுங்கள் 

உங்களுக்கு சிறுவயதில் தம்பி இருந்தால், தயவு செய்து நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். காரணம்,  பின்னாளில் அவர்கள் பெரிய ஆளாக வந்து உங்களை இம்சிக்க வாய்ப்பு இருக்கிறது. ராயன் படத்தின் படப்பிடிப்பிற்கு முதல் நாள் சென்ற பொழுது  எல்லாரும் ஓடி கொண்டு இருந்தார்கள். என்னவென்று கேட்டால், இதுதான் ஷூட்டிங் என்று சொன்னார்கள். சரி தனுஷ், செல்வா நம் அண்ணன் தானே என்று தயவு காட்டுவார் என்று நினைத்தேன்.  ஆனால் அண்ணனாவது, நொண்ணனாவது.. என்ற ரீதியில் தான் அவர் என்னை நடத்தினார். கொஞ்சம் கூட கரிசனம் காட்ட வில்லை. 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.