Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!-home decors idea this change in your bedroom a restful nights sleep a start to a new day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!

Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 02:03 PM IST

Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம் செய்தால், அது உங்களுக்கு நிம்மதியான இரவு உறக்கத்தைத்தரும். அது புதிய நாளுக்கான துவக்கமாக இருக்கும்.

Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!
Home Decors Idea : உங்கள் படுக்கை அறையில் இந்த மாற்றம்! நிம்மதியான இரவு தூக்கம்! புதிய நாளுக்கான துவக்கம்!

பீஸ் லில்லி எனப்படும் அமைதி அல்லி

அமைதி அல்ல என்பது ஒரு அழகான செடியாகும். இது உங்கள் படுக்கையறையில் வைத்துக்கொள்ள உதந்ததும் ஆகும். இது அடர் பச்சை வண்ணத்தில் இருக்கும். இதன் கண்ணாடி போன்ற இலைகள், அதன் வெள்ளை மலர்கள் உங்களுக்கு அமைதி மனநிலையை ஏற்படுத்தும்.

பாஸ்டன் ஃபெர்ன் (Boston Fern)

பாஸ்டன் ஃபெர்ன் என்பது பசுமையான செடியாகும். இது வீட்டில் உள்ள சைலென் மற்றும் ஃபார்மால்டிஹைட் என்ற மாசுக்களை அகற்றும் தன்மை கொண்டது. இது மறைமுக சூரியஒளியிலேயே செழித்து வளரும். இதற்கு தேவைப்படும்போது, எப்போதாவது தண்ணீர் ஊற்றினால் போதும். அடிக்கடி ஊற்ற வேண்டாம் என்பதால், இந்தச் செடியை உங்கள் படுக்கையறையில் வைத்து பராமரிக்கலாம்.

ஆரோஹெட் எனப்படும் அம்புக்குறிச் செடி (Arrow Head)

இது வீட்டுக்குள் வளர்க்க ஏதுவான தாவரமாகும். இதன் இலைகள் அம்புக்குறி போன்ற வடிவில் இருப்பவையாகும். இது பசுமை மற்றும் பழுப்பு வண்ணங்களில் இருக்கும். இது இயற்கையில் காற்றை சுத்தப்படுத்தும். இது வீடுகளில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இதை வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம்.

மான்ஸ்டெரா (Monstera)

மான்ஸ்டெரா செடியும் பச்சைபசேலென பசுமையாக காட்டியளிக்கும் செடியாகும். இது அழகான இலைகளைக் கொண்டது. இதன் இலைகள் கிழிந்திருக்கும். அது இந்தச் செடிக்கு கூடுதல் அழகு சேர்குகம். இதை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால் உங்கள் வீட்டுக்கு ஒரு பணக்கார தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் படுக்கையறையில் இந்தச் செடியையும் வைத்துக்கொள்ளலாம்.

அரிக்கா பால்ம் (Areca Palm)

அரிக்கா பால்ம் என்பது மற்றொரு அழகியச் செடி, சிறிய நீளமான இலைகளை கொண்ட செடியாகும். இதுவும் உங்கள் வீட்டுக்கு அழகான தோற்றத்தை தரும். இதையும் நீங்கள் படுக்கையறையில் வைத்துக்கொள்ளலாம்.

ஸ்னேக் ப்ளான்ட் எனப்படும் பாம்புச் செடி

பாம்புச் செடியின் இலைகள் பாம்புபோல் நீண்டிருக்கும் என்பதால் இதற்கு பாம்புச்செடி என்று பெயர். இந்தச் செடிக்கு குறைவான பராமரிப்பு போதும். இதற்கு குறைவான சூரியஒளி மற்றும் தண்ணீர் போதும். பல ஆண்டுகள் கூட இந்தச் செடி சூரியஒளி இல்லாமல் வளரும். மற்ற பல்புகள் அல்லது வெளிச்சம் தரும் மற்ற பொருட்களிடம் இருந்து தனக்கு தேவையான ஒளியை இது எடுத்து வளரும். வீட்டுக்குள் வளர்க்க ஏற்ற தாவரம் ஆகும்.

அதிர்ஷ்ட மூங்கில்

அதிர்ஷ்ட மூங்கில் செடிகள் மிகவும் சிறிய வகை வீட்டுச்செடிகள் ஆகும். இதை நீங்கள் வளர்ப்பது மிகவும் எளிது. இதை நீங்கள் முறையாக பராமரிக்க வேண்டிய தேவையும் இல்லை. அது தானாகவே அழகாக வளரும். இது உங்கள் வீட்டில் ஒரு இதமான சூழலை உருவாக்கும்.

இசட் இசட் தாவரம்(zz Plant)

குறைவான ஒளியிலும் நன்றாக வளரக்கூடியது இசட் இசட் தாவரம். இதற்கு குறைவான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் இலைகள் வட்டமாகவும், கண்ணாடி போன்றும் தோற்றமளிக்கும். அவை காற்றை சுத்தம் செய்யக்கூடியவை. உங்கள் படுக்கையறைக்கு பளிச் தோற்றத்தை தரும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.