Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு!-boy baby names beautiful baby boy names exclusive collection for your favourite sons - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு!

Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு!

Priyadarshini R HT Tamil
Aug 25, 2024 10:00 AM IST

Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள், உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு!
Boy Baby Names : அழகிய ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல மகன்களுக்கான பிரத்யேக தொகுப்பு!

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

அர்ணவ்

அர்ணவ் என்றால், பெருங்கடல் என்று அர்த்தம். உங்கள் செல்ல மகன், கடல்போன்ற பறந்து விரிந்த மனதைக் கொண்டிருப்பான் என்று பொருள். பரந்த மனம் கொண்ட உங்கள் மகனுக்கு அர்ணவ் என்பது மிகவும் பொருத்தமான பெயர்.

மனோஜ்

மனோஜ் என்றால் மனதில் பிறந்தது என்று பொருள். உங்கள் செல்ல மகனுக்கு இந்தப் பெயரை வைத்தால் அவர் வாழ்வு வளமாகும். எனவே இந்தப்பெயரை வைத்து மகிழுங்கள்.

விக்னேஷ்

விக்னேஷ் என்பது, விநாயகரின் பெயர். உங்கள் குழந்தைக்கு விநாயகரின் அருள் அளவற்று இருக்கவேண்டுமெனில், உங்கள் குழந்தைக்கு விநாயகப்பெருமானின் பெயரை வைத்துவிடுங்கள்.

கரண்

கரண் என்றால் கர்ணா, கருணை, போராளி ஆகியவற்றை குறிப்பிடுகிறது. கருணை நிறைந்தவராக உங்கள் குழந்தை திகழவேண்டுமெனில் இந்தப்பெயரை அவர்களுக்கு சூட்டி மகிழுங்கள். இது மகாபாரதத்தில் வரும் பெயர். பஞ்ச பாண்டவர்களுக்கு முன் குந்திக்கு பிறந்த மகனின் பெயர் ஆகும். கர்ணன் என்பவர் வள்ளல் குணம் கொண்டவர். கொடையென யாரும் யாசித்தால், தன்னிடம் இருப்பதை அப்படியே கொடுக்கும் குணம் கொண்டவர்.

ஹரிஷ்

ஹரிஷ் என்பது சிவனின் பெயர். இந்த பெயரைக் கொண்ட குழந்தைகளுக்கு சிவனின் அருள் கிட்டும்.

ஆரவ்

ஆரவ் என்றால் அமைதியான மற்றும் சாதுவானவர் என்று பொருள். இந்த பெயரை வைக்கும் ஆண் குழந்தைகள் சாந்தமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் அமைதி சொரூபமாக காட்சியளிப்பார்கள்.

சஞ்சய்

சஞ்சய் என்றால் வெற்றியாளர், வெற்றி பெற்றவர், வெற்றகரமானவர் என எண்ணற்ற அர்த்தங்களைக் கூறுகிறது. உங்கள் குழந்தை வெற்றியாளர்களாக வேண்டுமெனில், அவர்களுக்கு இந்தப்பெயரை வைக்கலாம்.

சித்தார்த்

சித்தார்த் என்றால், அறிவொளியை அடைந்தவர் என்று பொருள். புத்தரின் பெயர். இந்தப்பெயர் சமஸ்கிருத வார்த்தை சித்தா என்பதில் இருந்து வருகிறது. இதற்கு பர்ஃபெக்ட் மற்றும் நிலையான என்று பொருள். உங்கள் ஆண் குழந்தைக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தமானதாகும்.

ஷ்யாம்

ஷயாம் என்றால் அடர்ந்த, கிருஷ்ணன் என்று பொருள். கிருஷ்ண பகவானின் ஆசியைப் பெற்றவர் என்பதை குறிக்கிறது. ஷ்யாம் என்பது உங்கள் ஆண் குழந்தைக்கு ஏற்ற அழகான பெயராகும்.

வருண்

வருண், மழையின் கடவுள் வருண பகவான். கடல் அல்லது நீரின் பெயரை குறிக்கிறது. மழையைப்போன்ற இதமானவர் என்பதும் இதற்கு மற்றொரு அர்த்தமாகும். இந்தப்பெயர்கள் அனைத்தும் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவையாகும். அவர்களுக்கு இந்தப்பெயர்களை வைத்து அவர்கள் வாழ்வில் சிறக்க துணைபுரியுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.