தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Unique Names Day 2024: Date, History, Significance

Unique Names Day 2024: ‘உங்கள் பெயர் வித்தியாசமானதா?’ இன்றைய நாள் உங்களுக்குத்தான்! தனித்துவ பெயர்கள் தினம் இன்று!

Kathiravan V HT Tamil
Mar 05, 2024 06:30 AM IST

தனித்துவமான பெயர்கள் தினம் 2024: தேதி முதல் முக்கியத்துவம் வரை, இந்த சிறப்பு நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

தனித்துவ பெயர்கள் தினம் இன்று!
தனித்துவ பெயர்கள் தினம் இன்று! (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

தனித்துவமான பெயர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. மக்கள் சரியாக உச்சரிக்கத் தவறிய அல்லது நினைவில் நிற்கக்கூடிய ஒரு தனித்துவமான பெயர் உங்களிடம் உள்ளதா? அப்படியானால் Unique Names Day உங்களுக்கானதுதான்.! 

மார்ச் 5 

ஆண்டுதோறும் தனித்துவ பெயர்கள் கொண்டோரின் தினம் மார்ச் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோடியில் ஒரு பெயரைக் கொண்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தனித்துவமான பெயர்கள் தினம் செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. 

வரலாறு 

மனிதர்களை பெயர்களுடன் அடையாளம் காணத் தொடங்கியபோது, ஒவ்வொரு பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் விவசாய குழுக்களாக குடியேறத் தொடங்கினர். மேலும் ஒருவரை மற்றொருவரிடம் இருந்து வேறுபடுத்துவதை எளிதாக்குவதற்காக வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு பெயர்களை வழங்க வேண்டிய தேவை அதிகரித்தது.

எனவே, மக்கள் ஒருவருக்கொருவர் பெயரிடும் வழக்கத்தை ஏற்கத் தொடங்கினர். பல நாடுகளில், மக்கள் தங்கள் முதல் பெயரால் மட்டுமே அதிகம் அழைக்கப்படுகிறார்கள். இந்தியாவின் சில பகுதிகளில், மக்கள் தங்கள் தந்தை அல்லது தாயின் பெயரை தங்கள் குடும்பப்பெயராகப் பயன்படுத்துகின்றனர்.

முக்கியத்துவம் 

தனித்துவம் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியது. தனித்துவமான பெயர்கள் தினத்தை கொண்டாடுவதற்கான சிறந்த வழி, நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்து கொண்டு பரிசுகளை பகிர்ந்து கொள்வதாககும். 

இந்த் அநாளில் பெயரிடும் முறையின் பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் படிக்கலாம் மற்றும் காலப்போக்கில், மக்களும் அவர்களின் பெயர்களும் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்