தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss: ஈஸியா வெயிட் குறையணுமா? அப்ப இஞ்சி டீயை இப்டி செஞ்சு குடிங்க!

Weight Loss: ஈஸியா வெயிட் குறையணுமா? அப்ப இஞ்சி டீயை இப்டி செஞ்சு குடிங்க!

I Jayachandran HT Tamil
May 10, 2023 10:33 AM IST

உடல் எடையை எளிதாகவும் விரைவாகவும் குறைக்கும் இஞ்சி டீ செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி டீ
இஞ்சி டீ

ட்ரெண்டிங் செய்திகள்

பெரும்பாலான உடல் நல பிரச்னைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்கள் மூலமாக தீர்வு காணலாம். அந்த வகையில் எடை இழப்புக்கு உதவக்கூடிய இஞ்சி டீயின் செய்முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம். .

இஞ்சி டீ குடிப்பதுடன் சரியான உணவு முறையை கடைபிடித்து, தினசரி உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல விளைவுகளை காண முடியும். ஃபிரெஷான இஞ்சி மற்றும் சுக்கு இரண்டிலும் இஞ்சி டீ செய்யலாம். இவற்றின் செய்முறைகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.

ஃபிரெஷான இஞ்சி டீ செய்யத் தேவையான பொருட்கள்-

இஞ்சி - 2 அங்குலம்

தண்ணீர் - 250 மில்லி

தேன் - 1 டீஸ்பூன்(விரும்பினால்)

ஃபிரெஷான இஞ்சி டீ செய்முறை-

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

துருவிய இஞ்சியை சேர்த்து குறைந்த தீயில் வைத்து, 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.

இதனை வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தேன் கலந்து குடிக்கலாம்.

சுக்கு டீ செய்யத் தேவையான பொருட்கள்-

சுக்கு - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 250 மில்லி

தேன் - 1 டீஸ்பூன்(விரும்பினால்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதனுடன் சுக்கு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மட்டும் கொதிக்க விடவும்.

நீங்கள் விரும்பினால் இனிப்பு சுவைக்காக தேன் கலந்து குடிக்கலாம்.

இந்த காய்ந்த இஞ்சி டீயுடன் சமச்சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel