Mint To Coriander:புதினா முதல் கொத்தமல்லி வரை: உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் உணவுப்பொருட்கள்
Mint To Coriander: வெப்ப அலைகளை சமாளிக்கவும், உங்கள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத்தை வெல்ல உதவும் இந்த புத்துணர்ச்சியூட்டும் மூலிகைகள் பற்றிப் பார்ப்போம்.

கோடை காலத்தில் சில மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது! (Freepik)
Mint To Coriander: கோடைகாலம் வந்து, தீவிர வெப்ப அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி விட்டது. குளிர்பானங்கள் இல்லாத விருந்துகளே இல்லை எனலாம்.
வெப்ப அலையைச் சமாளிக்கவும், உங்கள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத்தை வெல்ல உதவும் குளிரூட்டும் உணவுகளை எடுத்துக்கொள்வதே அவசியம்.
நண்பகல் நேரத்தில் வெப்பத்தினால் உண்டாகும் பிரச்னைகளை சரிசெய்ய பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.