பூண்டு ஊறுகாய்; இப்படி செய்தால் 3 வேளை உணவுக்கும் வேறு சைட் டிஷ் தேட மாட்டீர்கள்!
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் நீங்கள் பூண்டு ஊறுகாயை செய்தீர்கள் என்றால் வெறும் வாயிலேயே அதை காலி செய்து விடுவீர்கள். அத்தனை அலாதியான சுவை கொண்டதாக இருக்கும். ஊறுகாய் பிரியர்களின் தேர்வு பூண்டு ஊறுகாய்தான். பூண்டு உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியது. குறிப்பாக செரிமானத்துக்கு உதவக்கூடியது என்பதால், நமது அன்றாட உணவில் பூண்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பூண்டு ஊறுகாயை மட்டும் செய்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். நீங்கள் வேறு எந்த சைட் டிஷ் வேண்டும் என்று கேட்கமாட்டீர்கள். இந்த பூண்டு ஊறுகாய் அத்தனை சுவையானது. இந்த முறையில் பூண்டு ஊறுகாய் செய்தால், அதை நீங்கள் சூடான சாதத்தில் நேரடியாக கலந்து சாப்பிடலாம் அத்தனை சுவையானதாக இருக்கும். நீங்கள் எந்த சைட் டிஷ் செய்யவும் தேவையில்லை. ஒரு பூண்டு ஊறுகாய் உங்களின் மூன்று வேளைக்கும் வேலையை மிச்சப்படுத்தும். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். சூப்பர் சுவையான பூண்டு ஊறுகாயை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பூண்டு பல் – 150 கிராம் (தோல் நீக்கியது)
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
வரமல்லித் தூள் – 2 ஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகர் – 2 ஸ்பூன்
வெல்லம் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பூண்டு அனைத்தையும் உறித்து, சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும. அதை வடிகட்டி ஒரு துணியில் உலரவிடவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாவுடன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து ஊறவைத்த பூண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அடுதுது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். ஆறியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை இரண்டு நாட்கள் ஊறவைத்து சாப்பிட சுவை அள்ளும். ஊறுகாயை ஊறவைக்கும்போது, வெயிலில் வைத்தால் நன்றாக இருக்கும்.
குறிப்புகள்
புளிப்பு சுவைக்காக வெள்ளை வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு என இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். ஆனால் அளவாகப் பயன்படுத்தவேண்டும்.
சுத்தமான, காற்று புகாத பாட்டிலில் மட்டுமே ஊறுகாயை சேமிக்கவேண்டும். இதை சப்பாத்தி, தயிர் சாதம், பரோட்டா போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். அனைத்து சாதத்துடனும் சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்