Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!

Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 18, 2024 10:20 AM IST

Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். கற்றாழைச் செடியை வளர்த்து பலன்பெறுங்கள்.

Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!
Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!

வீட்டில் கற்றாழைச் செடியை வளர்ப்பது எப்படி?

கற்றாழை ஒரு அழகானச் செடி, அது அழகுக்கு மட்டும் வளர்க்கப்படுவதல்ல, அதற்கான பராமரிப்பும் குறைவுதான். அதன் ஜெல் அத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீங்கள் உங்கள் வீட்டில் கற்றாழைச் செடியை வளர்க்க விரும்பினால், அதற்கு இங்கு சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி ஆரோக்கியமான கற்றாழை செடிகளை வீட்டில் வளர்த்து பலன்பெறுங்கள்.

தொட்டியைத் தேர்ந்தெடுப்பது

கற்றாழையின் வேர்கள் மிக ஆழத்திற்கு செல்லாது. அது நீளமானது கிடையாது. எனவே கற்றாழைச் செடி வைக்க ஆழமான தொட்டி தேவைப்படாது, எனவே அகலமான தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கற்றாழைச் செடி படர்ந்து வளரும்.

மண்

கற்றாழைச் செடிகளை நீங்கள் தோட்டத்திலோ அல்லது வேறு எங்கு வேண்டுமானாலும் எளிதில் வளர்ந்துவிடும். ஆனால் நீங்கள் அதை வீட்டு பால்கனி தொட்டியில் வைத்து வளர்க்கும்போது, அதற்கு நல்ல மண் கட்டாயம் தேவை. தோட்டத்து மண், வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம், தேங்காய் நார்கள் மற்றும் ஏதேனும் இயற்கை உரம் சேர்த்து நன்றாக கலவை செய்து அந்த மண்ணை தொட்டியில் நீங்கள் நிரப்பிக்கொள்ளவேண்டும்.

சூரிய ஒளி

கற்றாழைச் செடிக்கு நல்ல சூரியஒளி தேவை. அதன் இலைகள் நன்றாக செழித்து வளர வேண்டுமெனில், அதற்கு நல்ல சூரிய ஒளி படும் இடத்தில் செடியை நீங்கள் வைக்கவேண்டும். ஆனால், கொளுத்தும் வெயிலுக்கு அடியில் தொட்டியை வைத்தால், அது செடியை கருக்கிவிடும். எனவே ஒரு நாளில் ஓரிரு மணி நேரத்துக்கு மட்டுமே நேரடி சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் தொட்டிச் செடியை வைக்கவேண்டும். பின்னர் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவேண்டும்.

தண்ணீர்

கற்றாழைச் செடி சதைப்பற்றுள்ள செடிகளைப்போல்தான் சில நேரங்களில் இருக்கும். நீங்கள் வேருக்கு அதிக தண்ணீர் ஊற்றினால் அது செடியைக் கொன்றுவிடும். எனவே நீங்கள் மேற்புற மண் பகுதி காயும் வரை காத்திருந்துதான் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

வெட்டுவததே வளர்வதற்கு நல்லது

நீங்கள் முதல் முறையாக கற்றாழைச் செடி வளர்க்கிறீர்கள் என்றால், அதை நீங்கள் வெட்டி வெட்டி வளர்க்கவேண்டும். இயற்கையில் கிடைக்கும் கற்றாழையை கண்டுபிடியுங்கள். அதன் சிறிய இலைகளை கண்டுபிடித்து, வேருடன் இணைந்துள்ள அதை நீக்கவேண்டும். பின்னர் வீட்டுக்கு அவற்றை எடுத்து வந்து, தொட்டியில் நல்ல மண், உரக்கலவை சேர்த்து அதில் நட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

சிறந்த வெப்பநிலை

கற்றாழைக்கு 30 டிகிரிக்கு மேல் வெப்பம் ஏறினால் பிடிக்காது. அந்த அளவு வெப்பத்தில் வைக்கும்போது, கற்றாழையில் மஞ்சள் படரும். உள்ளே உள்ள ஜெல்லும் வெளியில் வரத்துவங்கும். எனவே அதைத்தடுக்க கடும் வெயிலில் தொட்டியை நேரடியாக வைக்கக்கூடாது.

தொட்டி மாற்றம்

நீங்கள் கற்றாழைச் செடியை அடிக்கடி தொட்டி மாற்றத் தேவையில்லை. ஏனென்றால், அதற்கு அந்த வசதி தேவையில்லை. ஒருவேளை, அது அதிகப்படியாக வளர்ந்தாலே அல்லது வேர்கள் தொட்டியைதாண்டி வளர்ந்தாலோ நீங்கள் அதற்கு ஏற்றாற்போல் தொட்டியில் வைக்கலாம். மற்றபடி அதற்கு வேறு தொட்டி தேவையே இல்லை. நீங்கள் சிறிய தொட்டியில் தாவரத்தை வளர்த்தால், பின்னர் தாவரம் வளர வளர அதை பெரிய தொட்டிக்கு மாற்றவேண்டும்.

தொட்டி மாற்றும் குறிப்புகள்

கற்றாழைச் செடியை நீங்கள் வேறு தொட்டிக்கு மாற்றும்போது, தொட்டியை ஒட்டியுள்ள மண்ணை கொத்தி கிளறவேண்டும். தோட்ட பயன்பாட்டுக்கு உள்ள கரண்டிகள் மற்றும் பெரிய ஸ்பூன்களை பயன்படுத்தி, மெதுவாக மண்ணை கிளறி, இடத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் தொட்டியில் இருந்து மெதுவாக அகற்றி, பழைய தொட்டியில் இருந்து மாற்றவேண்டும்.

வெட்டுதல் அல்லது டிரிம்மிங்

கற்றாழைச் செடியை டிரிம் செய்வது மிகவும் அவசியம். இதனால் புதிய இலைகள் தொடர்ந்து வளரும். பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கிவிடுவது அவசியம். நல்ல கத்தியைப் பயன்படுத்தி இலைகளை நன்றாக டிரிம் செய்யவேண்டும். இது புதிய சிறிய செடிகள் வளரவும், இந்தச்செடி செழித்து வளரசம் உதவும்.

எப்போது அறுவடை செய்யவேண்டும்?

கற்றாழையை நீங்கள் அதன் ஜெல்லுக்காக வளர்க்கும்போது, அதை நன்றாக வளர்க்கவேண்டும். அது நன்றாக படர்ந்து வளர்வதை உறுதிசெய்யுங்கள். வேருக்கு அருகில் உள்ள இதழை முதலில் வெட்ட வேண்டும். பின்னர், அடிப்பகுதியில் உள்ள இதழை வெட்டவேண்டும். அந்த ஜெல்லை பயன்படுத்தும் முன் அதில் மஞ்சள் நிறத்தில் வழியும் திரவத்தை அகற்றவோ அல்லது அது முற்றிலும் வடியும் வரை காத்திருக்கவோ வேண்டும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.