Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே!-gardening do you know which direction to plant basil plant at home here are some tips for maintaining it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே!

Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 10:58 AM IST

Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே!
Gardening : வீட்டில் துளசிச் செடியை எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? அதை பராமரிக்கும் குறிப்புகளும் இங்கே!

துளசி

உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள், துளசிச் செடியை தங்கள் இல்லங்களில் வைத்து பராமரிக்கிறார்கள். துளசி செடியை கட்டாயம் நமது வீடுகளில் வளர்க்கவேண்டும். அதற்கு காரணங்கள் என்ன? துளசி அதன் ஆன்மீக குணத்துக்காக மட்டும் அறியப்படுவது இல்லை. இதன் மருத்துவ குணங்களும் இதற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. இது வீட்டிற்கு செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலைக் கொடுப்பதாக கூறப்படுகிறது.

ஒருவர் வீட்டில் 14 துளசி செடிகளை வளர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த துளசிச்செடிகளை காலை எழுந்தவுடன் சென்று முகர்ந்தால், உங்களுக்கு அந்த நாளுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். உங்கள் வீட்டின் மொத்த நபர்களுக்கும் தேவையான ஆக்ஸிஜனை துளசிச் செடிகளே கொடுப்பதால், வீட்டில் துளசி வைக்க வலியுறுத்தப்படுகிறது. இதை தொட்டியிலே எளிதாக வளர்க்க முடியும் என்பதால், வளர்த்து பயன்பெறலாம்.

துளசி செடியை எங்கு வைப்பது?

உங்கள் வீட்டில் துளசிச் செடியை, கிழக்கு திசையில் வைக்கவேண்டும். கிழக்கு திசையில் வளர்க்கப்படும் துளசி செடிதான் வீட்டுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். சிறந்த பொருளாதாரம் மற்றும் நேர்மறையான சூழலை வீட்டில் ஏற்படுத்த வேண்டுமென்றால், இந்த துளசிச் செடி உங்களுக்கு உதவக்கூடிய ஒன்றாகும்.

கிழக்கு இல்லாவிட்டால், வேறு எந்த திசை?

உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வைக்க ஏற்ற இடம் இல்லாவிட்டால், வடகிழக்கும் அல்லது வடக்கு திசையில் இந்த துளசி செடியை நட்டு வளர்க்கவேண்டும்.

எங்கு வளர்க்கக்கூடாது?

தெற்கு திசையில் மட்டும் துளசிச் செடியை நட்டு வளர்க்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. அது ஏன் என்றால், தெற்கு திசை எமனுக்கான திசை என்று கூறப்படுகிறது. உங்கள் உயிரைப்பறிக்கும் கடவுளாக எமன் கருதப்படுகிறார். தென் திசையில் துளசி வளர்த்தால் உங்கள் வீட்டுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

துளசி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

வாஸ்து நிபுணர்கள் துளசி வளர்ப்பதை விரும்புகிறார்கள். இது உங்கள் வீட்டிற்கு தூய மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணங்களையும் கொடுக்கிறது. மேலும் பொருளாதாரத்தையும் அதிகரிக்கிறது. தினமும் 2 முதல் 8 துளசிகளை வாயில் போட்டு மெல்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. சுவாசக் கோளாறுகளை குணப்படுத்துகிறது.

துளசி வளர்க்கும் சரியான முறை

விதைகளின் மூலம் தான் துளசிச்செடியை வீடுகளில் வளர்க்க வேண்டும். துளசி விதைகளை நீங்கள் எளிதாக செடிகள் மற்றும் விதைகள் விற்கும் கடைகளில் வாங்கலாம் அல்லது உங்கள் வீட்டின் அருகில் துளசி செடிகள் இருந்தால், அதில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம். துளசி செடி நன்றாக செழித்து வளரவேண்டுமெனில், நீங்கள் அதை அதிகம் வளரும்போது டிரிம் செய்து விடவேண்டும்.

சூரிய வெளிச்சம்

முந்தைய காலத்தில் வீட்டின் முற்றத்தில் துளசி வளர்க்கப்படும். ஏன் அங்கு வளர்க்கப்பட்டது என்றால், அங்குதான் நேரடி சூரிய ஒளி கிடைக்கும். 4 முதல் 6 மணி நேரம் துளசி செடிக்கு சூரிய ஒளி தேவை. தினமும் சூரிய ஒளி துளசிக்கு தேவை. சூரிய ஒளி படும் இடத்தில் துளசிச் செடி வளர்வது நல்லது.

தண்ணீர்

துளசி செடிக்கு அதிகம் தண்ணீர் ஊற்றினால், அதன் வேர்கள் அழுகிவிடும். அதன் வேர்கள் அதிக தண்ணீரை தாங்காது. எனவே வெப்பநிலை மாற்றத்துக்கு ஏற்ப துளசி செடிக்கு தண்ணீர் விடும் அளவை அதிகரித்து அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். சூடாகவோ அல்லது மேல உள்ள மண் வறண்டாலோ மட்டும் தண்ணீர் விடவேண்டும். அப்போது அந்த வேருக்கு கிடைக்கும் ஈரப்பதம் போதும்.

மூடிவிடவேண்டும்

துளசி இலைகள் மதிப்புமிக்கவை மற்றும் மிகவும் மிருதுவானவை. எனவே கடும் கோடை காலத்தில் பழை வெள்ளை வேட்டி துணியால் அவற்றை மூடிவிடவேண்டும். சிலர் சிவப்பு துணியால் மூடியிருப்பார்கள். இது மத நம்பிக்கை மட்டுமல்ல, இது இலைகளை சூரியனின் கடும் கதிர்களிடம் இருந்து காப்பாற்றவும் உதவும்.

வளர்ச்சி நின்றால் என்ன செய்யவேண்டும்?

திடீரென துளசி செடி, வளர்வதை நிறுத்திவிட்டாலோ அல்லது அதன் இலைகள் காய்ந்துவிட்டாலோ அதை வேறு இடத்திற்கோ அல்லது தொட்டிக்கோ மாற்றிவிடவேண்டும். இதற்கு காரணம் அந்த மண் ஆகும். எனவே அந்த மண்ணுக்கு இயற்கை உரம் கொடுத்து, அதை நன்றாக கலந்து தேங்காய் நார்கள் போட்டு மூடிவிடவேண்டும். அப்போது அந்த மண் வலுவடையும்.

புதிய இலைகள் இல்லையா?

ஆரோக்கியாமான செடி வளரவேண்டுமெனில், முதலில் அதன் இலைகளை பறிக்கக்கூடாது. இதனால், முதலில் செடி புசுபுசுவென வளரும். ஆனால், காலம் செல்லசெல்ல வளர்வது நின்றுவிடும். இது ஏற்பட்டால், சில இலைகளை பறித்துவிடவேண்டும். பின்னர் அதை சரிசெய்ய முயலவேண்டும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.