Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள்!-gardening tips want your home to smell plant these flowers in the garden - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள்!

Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2024 03:49 PM IST

Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள். உங்கள் வீட்டில் மணம் பரப்பும்.

Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள்!
Gardening Tips : உங்கள் வீடே மணக்க வேண்டுமா? தோட்டத்தில் இந்த மலர்ச்செடிகளை நட்டு வையுங்கள்!

அடுக்கு மல்லி

உங்கள் தோட்டத்தில் அடுக்கு மல்லிச் செடிகளை நட்டு வளர்த்தீர்கள் என்றால், அது உங்கள் வீட்டில் நல்ல நறுமணத்தை பரப்பும். இது உங்கள் வீட்டுக்கு இயற்கை மணத்தைத்தரும். இந்த மணம் நீங்கள் அடிக்கும் ஃபர்ப்யூம்களில் இருந்து கூட கிடைக்காது. இதன் நறுமணம் உங்கள் வீடு முழுவதும் நிறையும்.

லெமன் கிராஸ்

லெமன் கிராஸ் செடி உங்கள் வீட்டில் சிட்ரஸ் மனதை பரப்பும். இதனால் உங்கள் வீட்டில் பூச்சிகள் எதுவும் இருக்காது. தோட்டமும் நன்றாக இருக்கும். இதை தண்ணீரில் போட்டு வைத்தால் நல்ல மணம் பரவும், உங்கள் வீடுகளை நறுமணத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

ரோஜா பூக்கள்

ரோஜா பூக்கள் அன்பின் அடையாளம் மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த மலராகும். ரோஜாவின் மணம், அது தரும் புத்துணர்வு, நீங்கள் அந்த மலரை கையில் தேய்த்துக்கொண்டால் நீண்ட நேரம் உங்களைச் சுற்றி நறுமணம் இருந்துகொண்டேயிருக்கும்.

செண்பகப் பூக்கள்

செண்பகப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் மலர்ந்து மணம் பரப்புபவையாகும். இதன் இதமான மணம் உங்கள் மனதை மயக்குபவையாகும். இந்த மணம் வீடு முழுவதும் நிறைந்து வீட்டையே நிரப்பும். இது அடர்ந்து வளரக்கூடிய பூச்செடியாகும். இதை நீங்கள் பால்கனிகளில் படரவிடலாம். இது உங்களுக்கு கனவு போன்ற மணத்தைதரும்.

மல்லிகை

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா, என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அனைவரின் மனதையும் மயக்கும் தன்மைகொண்டது இந்த மல்லிகைப்பூக்கள். பூக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதன் மணம் கொண்ட பெர்ஃப்யூம்கள் சந்தைகளில் அதிகளவில் உள்ளன. இவை சூரியன் மறைந்த பின்னர்தான் மலரும். இதன் வெண்ணிறமும், இது பரப்பும் மணமும், உங்கள் வீட்டையும் மனதையும் நிரப்பும் தன்மை கொண்டதாக இருக்கும்.

சம்பங்கி

சம்பங்கி பூக்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் அதிக மணத்தை பரப்பக்கூடியவை ஆகும். இதில் உள்ள மலர்களில் அதிக மணம் இருக்கும். இந்த மணம் மிகவும் வித்யாசமானதாகவும், நன்றாகவும் இருக்கும்.

ஸ்வீட் பீ (sweet pea)

இது இத்தாலியைச் சேர்ந்த பூச்செடி வகையாகும். இதன் இதழ்கள் மிகவும் மிருதுவாகவும், பல்வேறு வண்ணங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இதன் மணம் மிருதுவாக நம்மைக் கவரும். இது உங்கள் அறையின் சூழலை அழகானதாக்கும். நல்ல நறுமணத்தையும் பரப்பும். இந்த பூக்களைப்பறித்து உள்ளங்களில் தேய்த்துக்கொள்ளுங்கள். நீண்ட நேரம் உங்கள் கைகளில் மணம் இருக்கும்.

செம்பருத்தி

செம்பருத்தி பூக்கள் அதன் ஆழ்ந்த சிவப்பு நிறந்திற்கு பெயர்போனது. அந்த வண்ணம் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். அடர் பச்சை நிற இலைகளும், அடர் சிவப்பு நிற மலர்களும் மிகவும் நன்றாக இருக்கும். இது உங்கள் அறையில் மிதமான மணத்தை பரப்பும். இந்த மிதமான மணம் உங்கள் மனதை மயக்கும். இந்த பூ மருத்துவ குணமும் நிறைந்தது என்பதால், உங்கள் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய செடிகளுள் ஒன்று.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.