Gardening Tips : இருளில் ஒளிரக்கூடிய மற்றும் வீட்டில் வளர்க்கக் கூடிய இந்த செடியை பற்றி தெரியுமா?
Gardening Tips : இருளில் ஒளிரக்கூடிய மற்றும் வீட்டில் வளர்க்கக் கூடிய இந்த செடியை பற்றி தெரியுமா? அமெரிக்காவில் வளர்க்கப்படும் இந்த செடிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இருளில் ஒளிரும் இந்தச்செடியை வீட்டில் வைத்து எளிதாக வளர்க்கலாம். இந்த செடியைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த செடிக்கு பெயர் லைட்பயோ அல்லது ஒளிரும் செடி என்று பொருள். ஃப்யர்ஃப்ளை பெட்டுனியாவின் மரபணுக்கள் இருளில் ஒளிரக்கூடிய தன்மை கொண்டவையாகும். இதற்கு உயிரிஒளிரும் என்றுபொருள். இந்த செடியை நீங்கள் வீட்டில் வைத்து வளர்க்கலாம். உங்கள் வீட்டுக்கு அழகைத்தரும். இருளில் ஒளிரும் தன்மை கொண்டது. அதனால் உங்கள் வீட்டில் இருளான இடங்களில் இந்தச் செடியை வளர்த்தால் இரவில் அல்லது இருள் சூழும்போது இந்த இடம் ஒளிரும். இந்தச் செடி எப்படியிருக்கும். இதை எப்படி வளர்க்க வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.
அது எப்படி இருக்கும்?
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா என்பது தனித்தன்மையான மற்றும் அழகான பெயர். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இது காலை நேரத்தில் வழக்கம்போல்தான் இருக்கும். இரவு நேரத்தில் ஜொலிக்கும். இது பார்ப்பவர்கள் கண்களை கவர்ந்திழுக்கும். பார்ப்பவர்களுக்கு வித்யாசமான உணர்வைத்தரும்.
மரபணு
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா என்பது இயற்கையில் பூத்த மலர். இது படர்ந்து அடர்ந்து வளரக்கூடியதாகும். இதை நீங்கள் வீட்டில் வைத்தும் வளர்க்கலாம். இதன் மரபணுவே உயிரொளியாக ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா இதற்கு முழு சூரிய ஒளி தேவைப்படும். அப்போதுதோன் அது இரவில் பிரகாசமாக வளரும். தினமும் இந்தச் செடிக்கு அதிக நேரம் சூரிய ஒளியைக் கொடுக்கவேண்டும். எனவே உங்கள் தோட்டத்தில் அதற்கு ஏற்றாற் போல் இடம் இருந்தால் மட்டும் இந்தச்செடியை தேர்ந்தெடுஙஙகள். எப்போதும் இதன் மண்ணையும் ஈரமாக வைத்துக்கொள்ளவேண்டும். மேலும் தேவைப்படும்போது அதை வேறு ஒரு தொட்டிக்கு மாற்றுங்கள்.
வீட்டுக்குள் அல்லது வெளியில்
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா என இரண்டு இடத்திலும் இந்தச் செடியை வளர்க்கலாம். இதை ஃ8 முதல் 24 டிகிரி செல்சியசில் வளர்க்கவேண்டும். பனிக்காலங்களில் இதை வெளியில் வைக்கவேண்டும். அந்த குளுமையால் வளர்ச்சி மெதுவாக நடக்கும்.
பூச்செடி
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா என்றால் நீண்ட காலம் பூக்கள் பூக்கும் தன்மை கொண்ட ஒருச்செடி. மற்ற பூச்செடிகளைவிட இது அதிக காலம் பூக்கள் பூக்கும். இந்தச் செடி கோடை காலத்தில் பூக்கள் பூக்கும். கோடைக்காலம் முடிந்தும் பூக்கள் பூக்கும்.
பராமரிப்பு குறைவு
ஃபயர்ஃப்ளை பெட்டுனியா, இந்தச் செடியை பராமரிப்பது எளிது. மற்ற பூச்செடிகளைப்போல்தான் இதையும் பராமரிக்க வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றவேண்டும். ஆனால் அதிகம் தண்ணீர் தேங்கக்கூடாது. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் அந்தச்செடியை நேரடி சூரிய ஒளியில் படும்படி வைக்கவேண்டும். இதன் இலைகளை வெட்டாவிட்டால் செடிகள் விரைவில் சேதமடைந்துவிடும்.
இந்த ஃபயர்ஃப்ளை பெட்டுனியாவை நீங்கள் தண்டில் இருந்து வெட்டி வைத்து வளர்க்கவேண்டும். அதில் இருந்து அது முழுச் செடியாகவும், பூத்துக்குலுங்கும். இதை விதையில் இருந்து வளர்க்கவேண்டும். இந்த தண்டுகளை வெட்டி வளர்க்க முடியாது. இது காப்புரிமை பெற்ற தாவரமாகும்.
எங்கு இவற்றை வாங்க வேண்டும்?
இந்தச் செடி ரூ.2,500க்கு மேல் ஆகும். பெரும்பாலானோர் இந்தச் செடி ஒளிரும்போது தொட்டுப்பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் இந்தச்செடி அமெரிக்காவில் மட்டும்தான் கிடைக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்