Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!-kidney stone is the urine foamy ugh whats the danger see what you can do - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!

Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 03, 2024 10:53 AM IST

Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!

Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!
Kidney Stone : சிறுநீர் நுரையாகப் போகிறதா? அச்சச்சோ அதில் உள்ள ஆபத்து என்ன? என்ன செய்யலாம் பாருங்க!

சிறுநீரகம்

சிறுநீரகம் நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு ஆகும். அதை நாம் எப்போது ஆரோக்கியமாக வைத்துக்க்கொள்ளவேண்டும். இதனால் உங்கள் உடலில் நோய்கள் வருவது தடுக்கப்படும். சிறுநீர் சரியாக கழிவது மிகவும் அவசியம். வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறம் வரை சிறுநீர் இருக்கவேண்டும்.

அப்படி இல்லாமல் ஷாம்பூவை தண்ணீரில் கரைக்கும்போது நுரை வருவதுபோல் சிலருக்கு சிறுநீர் நுரையாகவும், மிகுந்த அடர்ந்தியாகவும் போகும். அப்படி ஏற்பட்டால் அது ஆபத்துதான். உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இல்லை என்பதை இது உணர்த்துகிறது. சிறுநீரை பரிசோதித்தால், அதில் புரதம் உள்ளது என்று குறிப்பிடுவார்கள்.

புரதம் என்றால் சிறுநீரகம் கரைந்து வெளியேறுவதுதான். இந்த விழிப்புணர்வு அனைவருக்கும்வேண்டும். இதற்கு கவலைகொள்ள தேவையில்லை. எளிய தீர்வை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – அரை கிலோ

செய்முறை

அரைக்கிலோ இஞ்சியை தோலுடனே தட்டி, வெள்ளைத்துணியில் மூட்டையாகக்கட்டி, தோசைக்கல்லில் வைத்து சூடாக்கி, அதை முதுகுப்புறத்தில் சிறுநீரகம் உள்ள இரண்டு புறத்திலும் ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

உங்களால் சிறுநீரகம் இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், இணையத்தில் படத்தை சரியாக தேடி எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கவேண்டும். அப்போது குப்புற படுக்கவேண்டும். அந்த இடம் முழுவதும். இருபுறமும் 10 நிமிடம், என 20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

சித்த மருத்துவ மருந்துகள் விற்கும் கடைகளில் புணர்நவாதி கஷாயம் எனப்படும் ஒரு கஷாயம் கிடைக்கும். அதை தினமும் காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பருகவேண்டும். இதை தொடர்ந்து செய்துவிட்டு, நுரையின் அளவு சிறுநீரில் குறைந்துவிடும்.

அது குறைந்தவுடன் இந்த சிகிச்சை முறையை நிறுத்திவிடவேண்டும். இதனுடன் வீரிய மருந்துகள் இல்லாமல் வீரியம் குறைந்த மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை மருத்துவரின் பரிந்துரையின்படி செய்யும்போது, அவர்களுக்கு உடல் நலன் வலுப்பெறும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.