தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Valaipechu Anthanan Interview About What Was The Issue Between Rd Raja And Sivakarthikeyan And Ayalaan Movie Issue

Sivakarthikeyan: விஜய் அஜித் இடமே குறி; கழுத்தை நெறித்த 87 கோடி கடன் பத்திரங்கள்; விட்டுச் சென்ற நட்பு; சிவா எழுந்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 13, 2024 04:19 PM IST

சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது ஆர் டி ராஜா சிவகார்த்திகேயனை அஜித் விஜய்க்கு சமமாக கொண்டு வர முயற்சிகளை எடுத்தார்.

சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “முதலில் இந்த படத்தை துவங்கியது தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தான். இந்த ஆடி ராஜா விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்தவர். அப்போது சிவகார்த்திகேயனோடு இவருக்கு நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இருவரும் ஒன்றாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியே வரும் பொழுது, ஆடி ராஜா சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வழிகாட்டுதலாக இருந்தார். 

சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவர் சினிமாவுக்குள் நுழையும் பொழுது,  அவருக்கு ஒரு காமெடியனாக நகர்ந்து சென்று விட வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் ஆடி ராஜா சிவகார்த்திகேயனை நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்..  ஆகையால் நீ சின்ன சின்ன கேரக்டர்களையெல்லாம் செய்யாதே என்று சொல்கிறார். 

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன், சந்தானத்துடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க அட்வான்ஸ் தொகையை வாங்கி வந்தார். இதை கேள்விப்பட்ட ஆடி ராஜா முதலில் அந்த அட்வான்ஸ் தொகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு வா.. நீ இந்த ஒரு படத்தில் அவருடன் நண்பனாக நடித்தால், எல்லா படங்களிலும் உன்னை அப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பார்கள். இதனால் உன்னுடைய சினிமா பாதையே மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ராஜா சிவகார்த்திகேயனின் மேனேஜராகவே மாறினார். 

இதனுடைய சிவகார்த்திகேயனுடைய வளர்ச்சி மெல்ல மெல்ல சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது ஆர் டி ராஜா சிவகார்த்திகேயனை அஜித் விஜய்க்கு சமமாக கொண்டு வர முயற்சிகளை எடுத்தார். 

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் சம்பளத் தொகையானது சொன்ன படி தயாரிப்பாளர்களிடம் இருந்து கிடைக்காமல் போகிறது. இதனையடுத்துதான் அவரே தயாரிப்பு பணியில் இறங்கினார். 

அது எப்படி நடக்கும் என்றால், ஆர்டி ராஜா சிவகார்த்திகேயனுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவார். பின்னால் இருந்து சிவகார்த்திகேயன் அதனை கவனித்துக்கொள்வார். இதற்கு இடையே சிவகார்த்திகேயன்நடித்த சில படங்கள் சரியாக செல்லாமல் போக, அவருக்கு கிட்டத்தட்ட 87 கோடி மொத்தமாக கடன் வந்து சேர்ந்து விட்டது. நடுவில் ஆடி ராஜாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சினையும் மூண்டது. இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். 

 

இந்த நிலையிதான் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனிடம் உன்னை நம்பி தான் கடன் கொடுத்தோம் ஆகையால் கடன் தொகையை நீயே எங்களுக்கு செலுத்த வேண்டும் என்று கழுத்தை பிடித்தார்கள். இதனையடுத்து சிவகார்த்திகேயன் அந்த கடன் தொகையை ஏற்றுக் கொண்டார். 

அதாவது ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் 25 கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு செலுத்த வேண்டும். அப்படி இவர் செலுத்தாத பட்சத்தில், அவருடைய படம் வெளியே வராது. 

கடைசியாக அந்தப் பணத்தொகையில் 27 கோடி ரூபாய் தங்கிவிட்டது.இதனையடுத்து தான் அவர்கள் இந்த 27 கோடியை கொடுத்தால்தான் அயலான் படத்தை நாங்கள் வெளியிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து அந்த 27 கோடியை சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கொடுத்து மொத்தமாக கடன் கொடுக்கல் வாங்கலில் இருந்து வெளியே வந்து விட்டார். இதுதான் பிரச்சினையின் பின்னணி” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.