Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?-lets know how many followers bollywood actresses have on instagram - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?

Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Sep 11, 2024 06:51 AM IST

Most Instagram Followers : இன்ஸ்டாகிராமில் பாலிவுட் நடிகைகளுக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?
Instagram Followers : அடேங்கப்பா.. இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட நடிகை இவரா? கடைசி இடத்தில் யார் தெரியுமா?

நடிகை ஷ்ரத்தா கபூர்

பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் 'ஸ்ட்ரீ 2' படம் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. படம் வெற்றி பெற்றவுடன், ஷ்ரத்தா கபூரின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் அதிகரித்தது, அவர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார், அவருக்கு இன்ஸ்டாகிராமில் 92.9 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷ்ரத்தா கபூர் ஒரே வீச்சில் பிரியங்காவை முந்தியுள்ளார். பிரியங்காவை இன்ஸ்டாகிராமில் 91.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

நடிகை ஆலியா பட்

பாலிவுட் சினிமாவிலும், பிசினஸிலும் கொடி பறக்கும் நடிகை ஆலியா பட் 2024 உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்திற்காக நடிகை ஆலியா பட் தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 85.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நடிகை ஆலியா பட் விரைவில் 'ஜிக்ரா' படத்தில் காணப்படுவார்.

நடிகை கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களைப் பொறுத்தவரை வெகு தொலைவில் இல்லை, மேலும் இன்ஸ்டாகிராமில் 80.3மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் கத்ரீனா கைஃப் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் "மெரி கிறிஸ்மஸ்". தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோன்

நடிகை தீபிகா படுகோனை இன்ஸ்டாகிராமில் 80.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்வீர் – தீபிகா ஜோடி நீண்ட நெடு நாட்களாக காதலர்களாக இருந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வந்த இந்த ஜோடிக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை அனுஷ்கா சர்மா

நடிகை அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் 68.5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா இணை வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்ட நிலையில், பிரசவம் லண்டனில் நடத்தப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்கு பின் லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா, அதன்பின் இந்தியாவுக்கு வரவில்லை.

நடிகை கிருதி சனோன்

நடிகை கிருதி சனோன் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், இன்ஸ்டாகிராமில் 58.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான ஹீரோபண்டி படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.பாலிவுட் நடிகை என்றாலே கவர்ச்சி புகைப்டங்களை வெளியிடுவார்கள். அதே பார்முலாவை தான் நடிகை கீர்த்தி சனோனும் பின்பற்றி வருகிறார்.அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார் கீர்த்தி சனோன்.

நடிகை சாரா அலி கான்

நடிகை சாரா அலி கானும் இன்ஸ்டாகிராமில் 45.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.