Foods improve sex: செக்ஸ் லைஃப்ப பூஸ்ட் செய்யும் உணவு வகைகள்! என்னென்ன தெரியுமா ?
Foods improve sex: ஆரோக்கியமான உணவுகள் உடலை சிறப்பாக இயங்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக செக்ஸ் வாழ்க்கையிலும் உணவு ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் சிறந்த வாழ்வை வாழ உதவும். நன்றாக சாப்பிடுவதன் மற்றொரு முக்கியமான நன்மை ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை கிடைக்கிறது. சரியான உணவுகளை உண்ணும்போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு மேம்படுகிறத. இதனால் ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செக்ஸ் ஈடுபாடுகளில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்பு உள்ளது. இது பல சமயங்களில் உதவியாகவும் இருக்கும் என்பது முக்கியமானதாக்கும்.
ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளைக் கொண்டிருப்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமான உணர்வோடு இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்றவைகளில் உதவுவதில் உணவு ஒரு பங்கு வகிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் உணவு பழக்க வழக்கங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது ஆகும். இதனை மேம்படுத்தக் கூடிய உணவு வகைகளை இங்கு காண்போம்.
அவகடோ பழம்
இவை ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. அவகடோவில் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தக்கூடிய வைட்டமின் ஈ மற்றும் கருவுறுதல் மற்றும் செக்ஸ் உந்துதலுக்கு உதவும் கனிமமான துத்தநாகம் ஆகியவி உள்ளன. இதனை சாப்பிடுவதால் ஆற்றல் மற்றும் ஹார்மோன் அளவு அதிகரிக்கலாம், ஏனெனில் அவற்றில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது.