Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகள் இவைதான்!

Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Aug 31, 2024 05:31 AM IST

Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகளை தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்.

Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகள் இவைதான்!
Morning Quotes : உங்கள் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக சுரக்கச் செய்யும் வழிகள் இவைதான்!

எண்டோர்ஃபின்கள்

எண்டோர்ஃபின்கள் என்றால், உடலின் இயற்கை வலி நிவாரணிகள் என்று பொருள். அவை மனஅழுத்தம், உடல் ரீதியான துன்பங்கள், அசவுகர்யங்கள் என உங்கள் உடல் படும் பாடுகளுக்கு எதிர்வினையாக உருவாகின்ற. அவை உங்களின் வலிகளைப்போக்கி, உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கிறது. எனவே எண்டோர்ஃபின்களைத் தூண்டும் வழிகளுள் ஒன்று உடற்பயிற்சி.

ஆக்ஸிடோசின்

ஆக்ஸ்டோசின் என்பது காதல் ஹார்மோன், இது உங்கள் பிணைப்புக்கும், தொடர்புக்கும் காரணமாகிறது. இந்த ஹார்மோன் தொடுதலினால் ஏற்படுகிறது. கைகளை பிடிக்கும்போது, கட்டிப்பிடிக்கும்போது, நாய் வளர்க்கும்போதும் ஏற்படுகிறது. நீங்கள் அன்பான காரியங்களைச் செய்யும்போது, அதை நீங்கள் தானாவே உங்களின் நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தும்போது, உங்களின் ஆக்ஸிடாசின் அளவு அதிகரிக்கிறது.

டோபமைன்

டோபமைன் ஹார்மோன்தான் நம்மை நமது இலக்குகளை நோக்கி ஓடி அவற்றை அடையச் செய்கிறது. நீங்கள் வெற்றி பெற்ற உணர்வையும் உங்களுக்கு தருகிறது. இது உங்கள் மூளையின் பாராட்டு செயல்பாடு ஆகும். நாம் நமது பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும்போது, நாம் நன்றாக உணர்கிறோம். அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பாராட்டுகிறது.

செரோட்டினின்

செரோட்டினின், நமது மனதை அமைதிப்படுத்துவது, உறக்கத்தை முறைப்படுத்துவது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தியானம் செய்யும்போது, காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளியில் நேரம் செலவிடும்போதும் நாம் செரோட்டினின் அளவை அதிகரிக்க முடியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது நமது அத்தனை மகிழ்ச்சி ஹார்மோன்களையும் இயற்கை முறையில் வலுப்படுத்துவதில் சிறந்த வழிகளுள் ஒன்றாகிறது. இதில் டோப்பமைன், செரோடினின் மற்றும் எண்டோர்ஃபில்களும் அடங்கும். எனவே வழக்கமான உடற்பயிற்சிகள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, உங்கள் மனநிலையை மாற்றுகிறது மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கச் செய்கிறது. அது ஒரு அரை மணிநேர நடையாக இருந்தாலும், அது உங்களுக்கு உதவுகிறது.

சிரிப்பு எப்படி உதவுகிறது

சிரிப்புதான் சிறந்த மருந்து. உங்களின் மகிழ்ச்சி ஹார்மோன்களை உங்கள் உடல் அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனில், அதற்கு நீங்கள் நன்றாக சிரிக்க வேண்டும். இது உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. அது உங்களின் மனஅழுத்தத்தை குறைக்கிறது. உங்களுக்கு மகிழ்ச்சி உணர்வைக் கொடுக்கிறது. எனவே காமெடி ஷோக்களை பாருங்கள் அல்லது உங்கள் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசைபோடுங்கள். அது உங்களை அதிகம் சிரிக்கச் செய்து உங்களின் மகிழ்ச்சி ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

தியானம் அனைத்தையும் மகிழ்ச்சியாக்குகிறது

உங்கள் உடலில் செரோட்டினின் அளவை அதிகம் சுரக்கச்செய்யவேண்டுமெனில், அதற்கு தியானம் உதவுகிறது. இது மனஅழுத்தத்தை குறைக்கிறது. இந்த வழிகள் உங்களின் மனதை அமைதிப்படுத்தும். உங்களின் கவனத்தை அதிகரிக்கும், உங்களுக்கு உள்ளார்ந்த அமைதியை உருவாக்கும். எனவே வழக்கமான தியானம் உங்களின மனநிலையையும், ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் இயற்கை முறையில் அதிகரிக்கும்.

இயற்கையுடன் இணைந்திருத்தல்

உங்களின மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்கும் வழிகளுள் ஒன்றாக இயற்கையுடன் நீங்கள் இணைந்திருப்பது உள்ளது. எனவே நீங்கள் வெளியில், குறிப்பாக சூரியஒளியில் இருந்தால் அது உங்களின மனதை அமைதிப்படுத்தி, உங்களின் மனஅழுத்தத்தை குறைத்து, உங்களின் பதற்றத்தைப் போக்கி, உங்களின் மனதின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.