Exercise : இந்த பிரச்சினை இருங்கா.. நீங்க உடற்பயிற்சியே செய்யக்கூடாது.. ஆரோக்கியம் தேடி போய் ஆபத்தை வாங்கி வந்த கதைதான்!
Exercise : நீங்கள் மது அருந்தியிருந்தால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் மது அருந்துவது நமது உடலை நீரிழப்பு செய்து நம்மை சோர்வடையச் செய்கிறது. இதன் காரணமாக, உடற்பயிற்சியின் போது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தசைகளும் சேதமடைகின்றன.
Exercise : இன்று ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பரவலாக அதிகரித்துள்ளது. இன்றைய அவசர உலகில் உடலை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாக்கிங் என ஏதோ ஒன்றில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல ஏராளமான நோய்கள் வருவதை தடுக்க உடற்பயிற்சி அவசியம். அதே சமயம் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டர்களை பொருத்தமட்டில் பிரச்சனையில் தீவிரத்தை குறைக்க உடற்பயிற்சி அவசியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் நீங்கள் உடல் ரீதியாக ஏற்கனவே சில பிரச்சனைகள் இருக்கும் போது உடற்பயிற்சி செய்வதில் சில சிக்கல்கள் உள்ளது.
உடற்பயிற்சி பொருத்தமல்ல
உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் நமக்கு ஓய்வு தேவைப்படும்போது உடற்பயிற்சி செய்வது பொருத்தமானதல்ல. இந்த பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது உடற்பயிற்சி அல்ல. சரியான ஓய்வு எடுப்பதுதான் இந்த பிரச்சனைகள் இருந்தால் உடற்பயிற்சியை தவிர்க்கவும்.
தலைவலி:
உங்களுக்கு தலைவலி இருந்தால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீரிழப்பு அறிகுறிகளில் ஒன்று தலைவலி. அல்லது உயர் இரத்த அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே தலைவலி இருந்தால் ஓய்வெடுங்கள். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது.
சுளுக்கு:
ஏதேனும் காயம் மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டால்.. உடற்பயிற்சிகளில் இருந்து விலகி இருங்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் வலி நீங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது தவறு. சிலர் மேல் உடல் பயிற்சிகளையும் செய்ய நினைக்கிறார்கள். இவை இரண்டும் தவறானவை. இவ்வாறு செய்வதால் வலி குறைய அதிக நேரம் எடுக்கும்.
சளி, இருமல்:
சளி, இருமல் இருந்தாலும் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உடல் அதன் ஆற்றலை பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். சளி மற்றும் இருமல் குணமடைய நேரம் எடுக்கும்.
தூக்கமின்மை:
உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் தூக்கம் கலைந்தால் உடல் சோர்வடையும். இந்த சோர்வுடன் உடற்பயிற்சி செய்வது எத்தனை காயங்களுக்கு வழிவகுக்கும்.
மது:
நீங்கள் மது அருந்தியிருந்தால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் மது அருந்துவது நமது உடலை நீரிழப்பு செய்து நம்மை சோர்வடையச் செய்கிறது. இதன் காரணமாக, உடற்பயிற்சியின் போது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தசைகளும் சேதமடைகின்றன.
இதனால் நீங்கள் எப்போதும் உங்கள் உடற்பயிற்சியை தொடங்கும் முன் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.Exercise :
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.