தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Food Reduces Anxiety : உங்கள் மனதை அமைதிப்படுத்த உணவுகளே போதும்! – இவற்றை முயற்சி செய்யுங்கள்!

Food Reduces Anxiety : உங்கள் மனதை அமைதிப்படுத்த உணவுகளே போதும்! – இவற்றை முயற்சி செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 26, 2023 12:15 PM IST

Food Reduces Anxiety : உணவு, உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உங்கள் மனதை அமைதிப்படுத்துவதில் உணவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

Food Reduces Anxiety : உங்கள் மனதை அமைதிப்படுத்த உணவுகளே போதும்! – இவற்றை முயற்சி செய்யுங்கள்!
Food Reduces Anxiety : உங்கள் மனதை அமைதிப்படுத்த உணவுகளே போதும்! – இவற்றை முயற்சி செய்யுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

வாழைப்பழங்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இதில் மெக்னீசியம், டிரிப்டோஃபான் ஆகியவை உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த மனநிலையையும் மாற்றி அமைத்து, உங்களுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபாஃன், செரோடினின் உற்பத்தியை அதிகரித்து, மனதில் மகிழ்ச்சி ஏற்பட வழிவகுக்கிறது.

முட்டை

தினமும் காலையில் வேக வைத்த முட்டை சாப்பிடுவது மனஅழுத்தத்தை போக்க உதவுகிறது. முட்டையில் வைட்டமின் டி, டிரிப்டோபஃன் மற்றும் சோலைன் சத்து உள்ளது. உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போதுதான் பயம், பதற்றம் ஏற்படுகிறது. எனவே உங்கள் நாளின் துவக்கத்தில் நல்ல மனநிலையை உருவாக்க முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கிரீன் டீ

நீங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், கிரீன் டீயை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூலிகை டீயில் எல்தீனைன் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பயத்தைபோக்கி அறிவாற்றல் பெருகவும் உதவுகிறது.

டார்க் சாக்லேட்

பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து டார்க் சாக்லேட் உங்களுக்கு தேவையான அளவு நிவாரணத்தை கொடுக்கிறது. டார்க் சாக்லேட்டில் பாலிஃபினால்கள் உள்ளது. அது எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. அது செரோடொனின் உருவாவதற்கு உதவி, நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.

சாமந்திப்பூ டீ

சாமந்தி பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கிறது. அதில் உங்களை குணப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அது பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

ஆயிஸ்டர்க்ள்

ஆயிஸ்டர்களில் துத்தநாகச்சத்து அதிகம் உள்ளது. அது பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது. அவற்றில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. அது உங்கள் மனநிலையை மாற்றுகிறது.

ஃபேட்டி ஃபிஷ்

ஃபேட்டி ஃபிஷ்ஷில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உடலில் செரோட்டினின் மற்றும் டோபோமைனை முறையாக பராமரிக்க உதவுகிறது. ஃபேட்டி ஃபிஷ் உட்கொள்வது உங்கள் மனநிலையை உயர்த்துகிறது. மனஅழுத்த கோளாறுகள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது.

ஓட்ஸ்

ஓட்ஸில், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின் பி6, ஃபோலேட் ஆகியலை உள்ளன. இவை மூளையில் மனஅழுத்தத்தை குறைக்கும் ரசாயன உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மனஅழுத்தம், பயம் மற்றும் பதற்றத்தை போக்குகிறது. ஓட்ஸில் உள்ள மெக்னீசியம் கார்டிசால் அளவை பராமரிக்க உதவுகிறது.

பெரிகள்

இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுள்ள பெரிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் வைட்டமின் சி, பாலிஃபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் மனநிலையை மாற்றும். உங்கள் பதற்றத்தை குறைக்கும்.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

ஃப்ளாக்ஸ் விதைகள், சியா விதைகள், வால்நட்கள் உள்ளிட்ட மற்ற விதைகள் உங்களின் மனநிலையை நேர்மறையாக பாதிக்கிறது. இந்த நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், சிங்க் சத்து மற்றும் வைட்டமின் பி சத்து ஆகியவை நிறைந்துள்ளதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்