Sagging Breast Exercise: மார்பகங்களுக்கான உடற்பயிற்சிகள்! இப்படி செஞ்சு பாருங்க
Sagging Breast Exercise: இயல்பாகவே பெண்களுக்கு வயதாகும் போது அவர்களது தோற்றம் மற்றமடையும். பெண்களின் மார்பகங்கள் வயது மூப்பால் அதிகம் பாதிப்படையும் ஒரு உறுப்பு ஆகும்.
பெண்களின் மார்பகங்களை சரியாக பராமரிக்க வில்லையெனில் மார்பக புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது . எனவே அவர்களது மார்பகங்களை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இயல்பாகவே பெண்களுக்கு வயதாகும் போது அவர்களது தோற்றம் மற்றமடையும். பெண்களின் மார்பகங்கள் வயது மூப்பால் அதிகம் பாதிப்படையும் ஒரு உறுப்பு ஆகும். மேலும் சில பெண்களுக்கு குழந்தை பிறந்த உடன் பாலூட்டுதல் போன்ற காரணங்களினால் கூட மார்பகங்கள் சரியாக இல்லாமல் இருக்கும். இத்தகைய மார்பகங்களை சரி செய்ய மருத்துவ உலகில் பல்வேறு விதமான சிகிச்சைகள் வந்த விட்டன.
சீராக இல்லாத மார்பகங்களை சரி செய்ய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வாயிலாக தொங்கிய நிலையில் உள்ள மார்பகங்களை சரி செய்து நேரான நிலையில் கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள அதிக பொருட் செலவு ஆகலாம். இதற்கு மாற்று வழியாக இந்த உடற்பயிற்சிகள் உள்ளன. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
கோப்ரா போஸ்
இதனை செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முகம் தரையை நோக்கியவாறு திரும்பி குப்புறவாக்கில் படுக்க வேணும். கைகளை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கைகளை ஊன்றி தலை மற்றும் கழுத்தை மட்டும் நிமிர்த்த வேண்டும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.
புஷ்-அப்கள்
புஷ்-அப் என்பது ஒரு உன்னதமான உடற்பயிற்சியாகும், மேலும் இதற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. புஷ்-அப்கள் எடுப்பதன் வாயிலாக மார்பு மற்றும் நெஞ்சு பகுதிகளை வலிமை படுத்தும் . இது உங்கள் மார்பகங்களின் தோற்றத்தை மேம்படுத்தும்.
டம்பல் உடற்பயிற்சி
இதனை செய்வதற்கு 3 முதல் 4 கிலோ எடை உள்ள டம்பல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தரையில் முதுகு உள்ளவாறு மல்லாக்க படுத்துக்க கொள்ள வேண்டும். யோகா செய்யும் பாய் அல்லது ஒரு பெஞ்சில் படுத்துக் கொள்ளுங்கள் . உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கால்களை தரையில் வைக்கவும்.ஒவ்வொரு கையிலும் ஒரு டம்பல் பிடித்து, உங்கள் கைகளை உங்கள் மார்புக்கு மேலே உயர்த்தவும். மீண்டும் கைகளை மார்புக்கு அருகில் கொண்டு வரவும். இதை தொடர்ந்து ஒரு சில நிமிடங்கள் செய்ய வேண்டும்.
சுவர் புஷ்அப்
சுவரிலிருந்து சுமார் இரண்டடி தூரம் தள்ளி நிற்கவும். உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைக்கவும். உங்கள் கைகள் மற்றும் கால்கள் இரண்டும் தோள்பட்டை அகலத்தில் இருக்க வேண்டும். உங்கள் மார்பு சுவரைத் தொடும் வரை உங்கள் முழங்கைகளை மெதுவாக வளைக்கவும். இது ஒரு புஷ்-அப் போன்றது ஆனால் தரைக்கு பதிலாக சுவரில் செய்ய வேண்டும். இதனை தினம் தோறும் செய்ய வேண்டும். இதன் வாயிலாக நல்ல பலனை பெறலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்