OTT Review: அறுவையா அலப்பறையா? - தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Review: அறுவையா அலப்பறையா? - தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?

OTT Review: அறுவையா அலப்பறையா? - தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Sep 25, 2024 08:07 AM IST

OTT Review: சித்தார்தாக நடித்து இருக்கும் அபிஷேக் குமார், ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு அந்நியமாக நின்றாலும், போக, போக கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக வர,முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார் - தலை வெட்டியான் பாளையம் விமர்சனம்

அறுவையா அலப்பறையா? தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?
அறுவையா அலப்பறையா? தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?

கதையின் கரு

எம்பிஏ படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பில், அதற்கு தயாராகி கொண்டிருக்கும் சித்தார்த்திற்கு ( அபிஷேக்)  திருநெல்வேலி அருகில் இருக்கும் தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக வேலை கிடைக்கிறது. அங்கு ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் மீனாட்சி தேவியின் கணவரான மீனாட்சி சுந்தரம், மனைவியின் இடத்தில் இருந்து கொண்டு அவரின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். இந்தச் சூழலில் அங்கு செல்லும் சித்தார்த்துக்கு அந்த கிராமத்து சூழ்நிலையும், அங்குள்ள மக்களும் கொடுக்கும் பிரச்சினைகள் என்ன?  அதனை அவர் எப்படி சமாளித்தார்? அவரின் எம்பி ஏ கனவு  பலித்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் தலைவெட்டியான் பாளையம் தொடரின் கதை!

செயற்கைத்தனம் பலவீனம்

சித்தார்தாக நடித்து இருக்கும் அபிஷேக் குமார், ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு அந்நியமாக நின்றாலும், போக, போக கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக வர,முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் அவரின் எக்ஸ்ப்ரஷன்கள் சிரிக்க வைக்கின்றன. ஆனால், அழுத்தம் நிறைந்த காட்சிகளில் அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்து இருக்கலாம். சேத்தன் - திவ்ய தர்ஷனி இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. 

ஊராரின் வேலைகளை சித்தார்த்தை லாவகமாக அவர் செய்ய வைக்கும் இடங்களும், அவருக்கு ஒரு பிரச்சினை என்ற போது, பெரியவராக உடன் நிற்கும் இடங்களும் நன்றாக இருந்தன. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திவ்ய தர்ஷினி காட்டிய தெளிவும், ஆளுமையும் சிறப்பு. நெகட்டிவ் கதாபாத்திரத்திலேயே பார்த்து பழகி  போன ஆனந்த் சாமி, இதில் கொஞ்சம் நகைச்சுவையை முயற்சி செய்து வித்தியாசம் காட்டி இருக்கிறார். 

மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பிரச்சினையை கையில் எடுத்து, அதில் நகைச்சுவையை புகுத்தி, சுவாரசியமாக கொடுக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சில பிரச்சினைகளை தவிர வேறு எந்த பிரச்சினைகளும் சுவாரசியமானதாக இல்லை. வீரியம் மிகுந்து இருக்கும் பிரச்சினைகளை கூட அழுத்தமாக கடத்த தவறியது தொடரின் பலவீனம். அதே போல தொடர் முழுக்க துருத்தி நிற்கும் செயற்கைத்தனம் நம்மை கதைக்கான நேட்டி விட்டியை முற்றிலுமாக உருகுலைத் து இருக்கிறது. கிருஷ்ணாவின் இசை கதையோடு ஒன்ற வில்லை.

நீங்கள் ஏற்கனவே பஞ்சாயத் தொடரை பார்த்து விட்டு, இந்த தொடரை பார்த்தால் உங்களுக்கு தலைவெட்டியான் பாளையம் பிடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், நீங்கள் இப்போதுதான் இந்த தொடரை பார்க்கிறீர்கள் என்றால் பொழுது போக்கிற்காக ஒரு முறை பார்க்கலாம். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.