Pre Marital tips: கல்யாணத்துக்கு ரெடி ஆகும் பொண்ணா நீங்க? உங்க முகம் மின்ன வேண்டுமா? இதோ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
Pre Marital tips: திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் பலர் உடனடியாக முகப் பொலிவு வர வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு மேக்கப் மட்டும் போதாது. பதிலாக உணவு, தினசரி முகத்திற்கு தேவையான பரமாரிப்பை கொடுக்க வேண்டும். அப்போதுதான் திருமண போட்டோக்களில் அனைவரும் எதிர்பார்க்கும் பொலிவான தோற்றம் கிடைக்கும்.
அனைவரது வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம் ஆகும். நண்பர்கள், உறவினர்கள் என எல்லாரும் வந்து வாழ்த்துவர். திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் பலர் உடனடியாக முகப் பொலிவு வர வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு மேக்கப் மட்டும் போதாது. பதிலாக உணவு, தினசரி முகத்திற்கு தேவையான பரமாரிப்பை கொடுக்க வேண்டும். அப்போதுதான் திருமண போட்டோக்களில் அனைவரும் எதிர்பார்க்கும் பொலிவான தோற்றம் கிடைக்கும். இந்த நல்ல நாளில் உங்களது முகம் பொலிவடைய சில டிப்ஸ்கள் இதோ.
உணவு முறைகள்
நமது முகம் மற்றும் உடல் பொலிவு பெற மேக்கப் மட்டும் போதாது. உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே திருமணம் முடிவான பின்பு உணவுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். க்ராஸ் டயட் எனும் உடனடி உணவு முறை மாற்றம் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கலாம். அதனை தவிர்ப்பது நல்லது. மேலும் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புரோட்டின் அதிகம் உள்ள உணவை சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டு முடிக்க வேண்டும். மற்ற கெடுதல் உண்டாக்கும் உணவுகளை சாப்பிட கூடாது. தினமும் 8 முதல் 9 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
முகம் ஜொலிக்க செய்ய வேண்டியவை
திருமணம் நடக்க சில மாதங்கள் இருக்கும் போதே சரும பாராமரிப்பை ஆரம்பிக்க வேண்டும். சருமத்தை வெயில், மாசுக்களில் இருந்து காப்பாற்ற சன்- ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும், மேலும் மாய்ஸ்சரைசர் (moisturizer) போடுவதால் முகத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க முடியும்.
ஒவ்வொரு மாதமும் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். முகத்தில் உள்ள பருக்கள், சிறிய துளைகள, கருவளையங்கள் ஆகியவற்றை குறைக்கும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இயற்கையான முறையிலான முல்தானி மிட்டி, கடலை மாவு, கற்றாழை(Aloevera) பயன்படுத்த வேண்டும். மேலும் கஸ்தூரி மஞ்சள் தொடர்நது உபயோகிக்கும் போது சிறப்பான மாற்றத்தை காணலாம்.
தவிர்க்க வேண்டியவை
மருத்துவர்கள் பரிந்துரை செய்யாத கெமிக்கல் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை திருமணத்திற்க்கு ஒன்று, இரண்டு மாதம் மட்டும் இருக்கும் போது, புது விதமான பேஷியல் முறைகளை முயற்சி செய்ய கூடாது. அதிரடியாக நிறத்தை மாற்று க்ரீம்களையும் முயற்சி செய்யக்கூடாது.
ப்ளீச்சிங் செய்வதற்க்கு முன்பே, சேம்பிள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த முறை சென்சிடிவ் சருமங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ப்ளீச்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்,
மன ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தை போலவே மன ரீதியாகவும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். புதியதாக கிடைக்கும் உறவுகளோடு இயல்பாக பழக வேண்டும். திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் தெளிந்த மனநிலையில் இருத்தல் அவசியமான ஒன்றாகும். குழப்பங்களை தவிர்த்து மன தைரியத்தோடு இருத்தல் வேண்டும்.