கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது! அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது! அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது! அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 11, 2024 04:22 PM IST

கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது என்று பாருங்கள். மேலும் அதன் நன்மைகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளுங்கள்!

கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது! அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!
கத்தரிக்காயை யாரெல்லாம் தவறியும் சாப்பிடக்கூடாது! அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்!

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

கத்தரிக்காயை சிலர் சாப்பிடக்கூடாது. எந்த பிரச்னைகள் உள்ளவர்கள் எல்லாம் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது என்று பாருங்கள்.

வயிற்றில் கற்கள் பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை கட்டாயம் சாப்பிடக்கூடாது. இதில் உள்ள கார்ப்புத்தன்மை உங்களின் வயிறு பிரச்னைகளை அதிகரிக்கும்.

ரத்தப்பற்றாக்குறை அல்லது ரத்தசோகை உள்ளிட் பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. கத்தரிக்காயில் இரும்புச்சத்தை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் ரத்தத்தில் பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது.

அரிப்பு, அலர்ஜி போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்களும் கத்தரிக்காயை எடுத்துக்கொள்ளக்கூடாது. இதன் கார்ப்புத்தன்மை சருமத்தில் மேலும் கோளாறுகளை ஏற்படுத்தும்.

செரிமான கோளாறுகள் உள்ளவர்கள், வயிற்றில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளவர்களும் கத்தரிக்காயை எடுத்துக்கொள்ளக்கூடாது. வாயுத்தொல்லை, அல்சர், அசிடிட்டி உள்ளவர்களும் கத்தரிக்காயை தொடவேக்கூடாது.

கண்களில் பிரச்னைகள் மற்றும் எரிச்சல் உள்ளவர்களும் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. எனவே இந்த கோளாறுகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

கத்தரிக்காயின் நன்மைகள்

கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.

அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.

கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.