Hemoglobin Level : ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தசோகையை விரட்டியடிக்க வேண்டுமா? இந்த விதை போதும்!
Benefits of Halim Seeds : இதை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஊறவைத்து வாரத்தில் 2 முறை மட்டும்தான் எடுக்க வேண்டும். அதிகளவு எடுக்கக்கூடாது. கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.
கால்சியம், இரும்புச்சத்தை அதிகரித்து, ஹீமோகுளோபினை உயர்த்தி, ரத்தசோகையை நீக்க இந்த ஒரு விதை மட்டும் போதும். அதற்காக நீங்கள் தனியாக எந்த உணவையும் நாடிச்செல்ல வேண்டாம்.
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். பெண்களுக்கு, கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் தாராளமாக தீர்வை தரும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். சாலியா விதை அல்லது ஹலீம் விதைகள் எனும் இந்த விதைகளில் வைட்டமின் சி, ஏ, இரும்புச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் உள்ளது.
சாலியா விதையை அதிகமாக பயன்படுத்தவும் கூடாது. ஏனெனில் ஒரு ஸ்பூன் சாலியா விதையில் 12 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது. அதிகம் பயன்படுத்தினால், உடலில் இரும்புச்சத்து அதிகரித்துவிடும். அதுவும் உடலுக்கு கெடுதல்.
தேவையான பொருட்கள்
சாலியா விதைகள் – 2 ஸ்பூன்
பாதாம் – ஒரு கைப்பிடியளவு
கட்டி கற்கண்டு – ஒரு கைப்பிடியளவு
ஏலக்காய் – 3
சுக்குப்பொடி – கால் ஸ்பூன்
செய்முறை
இரண்டு ஸ்பூன் சாலியா விதைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து 8 மணி நேரம் ஊறவிடவேண்டும்.
எனவே இரவில் ஊறவைப்பது ஏற்றது. அடுத்த நாள் காலையில் பார்த்தால், அந்த விதைகள் ஊறியபின் ஜெல்போல் இருக்கும்.
அடுத்து பாதாம், கட்டிக்கற்கண்டு மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்த பொடியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் தனியாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி கண் பார்வையை அதிகரிக்க உதவும்.
ஒரு டம்ளர் பாலை காய்ச்சி, அதில் ஊறவைத்த சாளியா விதைகளை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள பாதாம் பொடியை மற்றும் சுக்குப்பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விதை வெந்து அனைத்தும் நன்றாக கொதித்து வந்தவுடன் இறக்கவேண்டும். அதை மிதமான சூட்டில் எடுத்து பருகவேண்டும்.
உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள அதிகமான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றிவிடும். மலச்சிக்கலை குணமாக்கும்.
வயிறை நிரப்பி வயிறு நிறைந்த உணர்வைக்கொடுப்பதால், இது நீங்கள் தேவையற்ற உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க உதவும். இதில் அதிகளவு புரதச்சத்து உள்ளதால் தசைகளை நன்றாக பராமரிக்கும்.
இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், நீங்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைட்டமின் சி, ஏ உள்ளது. ஃபோலிக் அமிலங்கள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதகரிக்கும். சளி, இருமல் காய்ச்சலை குணப்படுத்தும்,
சாலியா விதையில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை முறையாக்கும். குடல்லி உள்ள புண்களை சரிசெய்து, மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லையை குணமாக்கும்.
சாலியா விதையில் உள்ள இரும்புச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் தாயப்பாலை அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டால் நிறையபேர், உடல் சோர்வு, கை-கால் வலி என பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். இவையனைத்தையும் இது குணப்படுத்தும். இது ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும். மாதவிடாய் சுழற்சியை சரிசெய்யும். பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னைகளை சரிசெய்து, கர்ப்பம் தரிக்க உதவும்.
இதை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஊறவைத்து வாரத்தில் 2 முறை மட்டும்தான் எடுக்க வேண்டும். அதிகளவு எடுக்கக்கூடாது. கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்