தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg For Sexual Well Being : உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ‘செக்ஸ்’ வாழ்க்கை சிறக்கவும் உதவுகிறது முட்டை!

EGG for Sexual Well being : உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ‘செக்ஸ்’ வாழ்க்கை சிறக்கவும் உதவுகிறது முட்டை!

Priyadarshini R HT Tamil
Jun 17, 2023 01:11 PM IST

Eggs for Sexual Wellbeing : பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு பாலியல் உணர்வு பெருமளவில் தூண்டப்படாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதற்கு ஹார்மோன்கள், மாதவிடாய், மன அழுத்தம், சோர்வு, மாத்திரைகள் உட்கொள்தல் உள்ளிட்ட நிறைய காரணங்கள் உண்டு.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம். நாம் பல்வேறு தீர்வுகளை எதிர்கொள்வோம். அவை உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கிய உணவு உட்கொள்வது என நாம் பல்வேறு விஷயங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருப்போம். ஆனால் உங்களுக்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான ஒரு தீர்வு உண்டென்றால், அது முட்டை. சக்தியை அதிகரிக்கும் ஒரு உணவு முட்டை. அதனால், முட்டை பாலியல் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய உணவாகும்.

முட்டையில் உள்ள சத்துக்கள், புரதம் மற்றும் தனித்தன்மையான வேதியல் பொருட்களின் அளவு பாலியல் உணர்வுகளை அதிகம் தூண்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முட்டையில் உள்ள வைட்டமின் பி, பி6 மற்றும் பி5 உங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டி உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் முட்டைகள் மனஅழுத்தத்திற்கு எதிராக போராடவும், உங்கள் உடலில் ஹார்மோனின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது. இதை நீங்கள் வேகவைத்து, பொரித்து, ஆம்லேட் செய்து எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டை உட்கொள்வதால் பாலியல் உணர்வுக்கு நேரடியாக உதவுவதில்லை. அதில் உள்ள சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதில் பாலியல் உணர்வுகளும் அடங்கும்.

முட்டையில் தேவையான சத்துக்கள் மிகுந்துள்ளன. அவை வைட்டமின்கள், மினரல்களும் அடங்கும். இந்த சத்துக்கள் ஹார்மோன் சுரப்பை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. அவை பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவையாகும்.

முட்டையில் அதிக உயர்தர புரதம் உள்ளது. அவை பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகிறது. திசுக்களை சரிசெய்ய புரதம் உதவுகிறது. அவை பாலியல் இயக்கத்துக்கும் உதவுகிறது. முட்டைகள் உடலில் சக்தியை அதிகரிக்கவும், பராமரிக்கவும் உதவுகின்றன. சோர்வை குறைக்க உதவுகிறது. இதனால் ஆணுறுப்பு விறைத்தல் குறைபாடு குறைக்கப்படுகிறது.

முட்டையில் வைட்டமின் பி5 (பேன்டோதெனிக் ஆசிட்) மற்றும்ம பி6 (பைரிடாக்சின்) உள்ளது. இவையிரண்டு செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த வைட்டமின்கள் ஹார்மோன் அளவை முறைப்படுத்தவும், ஆரோக்கியமான பாலுணர்வுக்கும் வழிவகுக்கிறது.

முட்டையில் உள்ள சிங்க் சத்துக்கள், டெஸ்டோஸ்ரோன் உருவாக உதவுகிறது. இந்த ஹார்மோன் ஆண், பெண் இருவருக்குமே பாலியல் உணர்வை வழங்கக்கூடியது. போதிய சிங்க் அளவு இந்த ஹார்மோன் உருவாக உதவுகிறது.

முட்டையில் உள்ள கொலைன், மூளையின் செயல்பாட்டு உதவுகிறது. மூளை நன்றாக செயல்படும்போது இயல்பான பாலியல் உணர்வு தூண்டப்படுகிறது. அனைவருக்கும் இது பொருந்தாது. இதுமட்டுமல்ல ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு முட்டையுடன் சரிவிகித உணவு தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

அத்துடன் உடற்பயிற்சி, மனஅழுத்த மேலாண்மை எடை ஆகிய அனைத்தையும் முறையாக பராமரித்து இன்புற்று வாழுங்கள். மேலும் குறிப்பிட்ட செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. எனவே தேவைக்கு ஏற்ப மருந்துகள் வேண்டுமானால் உட்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்