தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Biriyani : ஹைத்ராபாத் பிரியாணி ஸ்டைலில் ஸ்பெஷல் முட்டை பிரியாணி! இப்டி செஞ்சு பாருங்க, டேஸ்ட் சும்மா அள்ளும்!

Egg Biriyani : ஹைத்ராபாத் பிரியாணி ஸ்டைலில் ஸ்பெஷல் முட்டை பிரியாணி! இப்டி செஞ்சு பாருங்க, டேஸ்ட் சும்மா அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Jul 04, 2023 02:13 PM IST

Egg Biriyani : பிரியாணி பிரியர்கள் இந்த முட்டை பிரியாணியை ஒருமுறை செய்து சுவைத்து விட்டீர்கள் என்றால், மீண்டும் மீண்டும் சுவைக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். வீட்டில் குட்டீஸ்கள் இதுபோல் வித்யாசமான செய்முறையில் செய்துகொடுக்கும் உணவுகளை கட்டாயம் சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து பாருங்கள்.

ஸ்பெஷல் முட்டை பிரியாணி ரெசிபி
ஸ்பெஷல் முட்டை பிரியாணி ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி ஊறவைத்து, அலசி, உலர்ந்தது - 2 கப்

ஏலக்காய் - 6

பட்டை - 4

பிரியாணி இலை - 4

கருப்பு பட்டை - 1

உப்பு - தேவையான அளவு

வேகவைத்த முட்டை - 4

எண்ணெய் - 2 ஸ்பூன்

வெங்காயம் - பொடியாக நறுக்கியது

ஸ்டார் சோம்பு - 1

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - கீறியது 3

கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் பொடி - 1 ஸ்பூன்

தயிர் - 1 கப்

புதினா இலை - தேவையான அளவு

பால் - 3 ஸ்பூன்

குங்குமப்பூ - சிறிதளவு

தண்ணீர் - 7 கப்

அரிசியை நன்றாக அலசி, 30 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும். குங்குமப்பூவை வேறு கிண்ணத்தில் பாலில் ஊறவைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெயை காய வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயங்களை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முட்டையை வேகவைத்து, ஃபோர்கால் குத்தி வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு குக்கர் அல்லது கடாயில் எண்ணெயை சூடுசெய்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். முழு மசாலாப்பொருட்களை சேர்க்க வேண்டும். அனைத்தையும் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக சில்லி பவுடர், கரம் மசாலா, தயிர், புதினா இலைகள் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

முட்டை, வறுத்த வெங்காயம் சேர்த்து, கிரேவி திக்காகும் வரை வதக்கி ஸ்டவில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து அரிசி மற்றும் மசாலாக்கள், நெய், உப்பு சேர்த்து வேகவைத்து வடித்துக்கொள்ளுங்கள். அரிசி பொலபொல வென்று இருக்க வேண்டும்.

இப்போது மற்றொரு பாத்திரத்தில் அரிசியை பரப்பிவிட்டு முட்டை மசாலாவை அதன் மீது பரப்ப வேண்டும். மீண்டும் அரிசி, மாசலாவை மாற்றி, மாற்றி பரப்பிவிட்டு எஞ்சிய புதினா, மல்லித்தழை மற்றும் வறுத்த வெங்காயங்கள், குங்மப்பூ ஊறவைத்த பால் ஆகியவற்றை ஊற்றி எஞ்சிய தண்ணீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக பாத்திரத்தை மூடி, 5 நிமிடம் நல்ல தீயில் வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும்.

பிரியாணியை 10 நிமிடங்கள் மூடி வைத்து விடுங்கள். பின்னர் திறந்து சிறிது கிளறிவிட்டு, தட்டில் போட்டு பரிமாறினால், வேற லெவலில் டேஸ்ட் அள்ளும். இதற்கு ரைத்தா அல்லது கிரேவி என எது வேண்டுமானாலும் நீங்கள் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

பிரியாணி பிரியர்கள் இந்த முட்டை பிரியாணியை ஒருமுறை செய்து சுவைத்து விட்டீர்கள் என்றால், மீண்டும் மீண்டும் சுவைக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். வீட்டில் குட்டீஸ்கள் இதுபோல் வித்யாசமான செய்முறையில் செய்துகொடுக்கும் உணவுகளை கட்டாயம் சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து பாருங்கள்.  

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்