தொப்பையை குறைக்கும் போராட்டமா கவலைபடாதீங்க.. உடல் எடையை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும் பாருங்க..
வெந்தயம் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. வெந்தயத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை இங்கே தெரிந்துகொண்டு பின்பற்றவும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்று பலருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. துரித உணவுகள், மன அழுத்தம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்தல், மாறிவரும் அவசர வாழ்க்கை போன்றவற்றால் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சிகனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைக்க பலரும் ஜிம், வாக்கிங், ஜாக்கிங் என்று பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடுகளுடன் முயற்சித்தால் உடல் எடை குறையும். உணவில் வெந்தயத்தை பயன்படுத்துவது உடல் எடையை குறைக்க உதவுவது பற்றி இங்கு பார்க்கலாம். எப்படி பயன்படுத்துவது நல்லது என்பதையும் பார்க்கலாம்.
வெந்தயம் சமையலறையில் உள்ள ஒரு அதிசய மருந்து என்று சொல்லலாம். இதற்கு எல்லா நன்மைகளும் உண்டு. வெந்தயத்தில் வைட்டமின் ஏ, பி6, சி, கே, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், தாமிரம் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளன. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நல்லது. எடை இழப்புக்கும் வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. வெந்தயத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமா?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வெந்தயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால்தான் இவற்றை உட்கொண்டால் நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். பசியைத் தடுக்கிறது. எனவே, குறைவான உணவை உட்கொள்வது எடை இழப்பு பயணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.