தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Coconut : வளர்சிதை மாற்றத்துக்கு உதவி, உடல் வளர பெரும்பங்கு வகிக்கும் தேங்காயின் நன்மைகள் என்ன?

Benefits of Coconut : வளர்சிதை மாற்றத்துக்கு உதவி, உடல் வளர பெரும்பங்கு வகிக்கும் தேங்காயின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Sep 25, 2023 01:30 PM IST

Benefits of Coconut : மசாலா முதல் பால் வரை தேங்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

Benefits of Coconut : வளர்சிதை மாற்றத்துக்கு உதவி, உடல் வளர பெரும்பங்கு வகிக்கும் தேங்காயின் நன்மைகள் என்ன?
Benefits of Coconut : வளர்சிதை மாற்றத்துக்கு உதவி, உடல் வளர பெரும்பங்கு வகிக்கும் தேங்காயின் நன்மைகள் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காயில் உள்ள மிதமான ஃபேட்டி ஆசிட்கள் குழந்தைகளுக்கு உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நீர்ச்சத்து இழப்பபை தடுக்க உதவுகிறது. தேங்காயில் எலெக்ட்ரோலைட்கள் உள்ளன. அது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்ககிறது. தசைகளும், நரம்புகளும் ஆரோக்கியமாக இருக்க தேங்காய் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தேங்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது வயதாவதை தாமதமாக்குவதுடன், சருமத்தையும் பாதுகாக்கிறது. சூரியனின் நச்சுக்கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கிறது.

அதற்காகத்தான் தேங்காய் எண்ணெயை நாம் வெளியில் இருந்து சருமத்திற்கு தடவுகிறோம். குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி காலை இளவெயிலில் நிற்க வைத்தால், அவர்களின் சருமம் வைட்டமின் – டியை அப்படியே எடுத்துக்கொண்டு சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

பற்களுக்கும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் நல்லது. தேங்காய் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தை, உடல் நன்றாக கிரகிக்க உதவுகிறது. இவையிரண்டும் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் உதவுகிறது. அதனால்தான் தலைக்கும் தேங்காய் எண்ணெயை தடவுகிறார்கள். எந்த மூலிகை எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய் கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கும் தேங்காய் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேன் மற்றும் பொடுகுகளில் இருந்தும் முடிக்கால்களை தேங்காய் காக்கிறது.

தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தேங்காயில் லாரிக் அமிலம் உள்ளது. அது மோனோலாரின் என்பதை உருவாக்குகிறது. இந்த மோனோலாரின் பாக்டீரியாக்கள், பூஞ்ஜைகள் மற்றும் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கிறது. அதிகளவில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தேங்காயில் உள்ள பொட்டிசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், பக்கவாதம் வராமல் காக்கிறது.

தேங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதால், தேங்காயை நீங்கள் தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய்ப்பால், மசாலா ஆகியவற்றை செய்தும் உணவில் தேங்காயை சேர்த்துக்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்