தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Watermelon: தர்பூசணி பழத்துடன் மறந்தும் இதை எல்லாம் சாப்பிடாதீங்க

Watermelon: தர்பூசணி பழத்துடன் மறந்தும் இதை எல்லாம் சாப்பிடாதீங்க

Aarthi V HT Tamil
May 03, 2023 10:54 AM IST

தர்பூசணி சாப்பிடும் போது சில உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவதால் உடல்நலக்குறைவு ஏற்படும்.

தர்பூசணி
தர்பூசணி

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் 95% தண்ணீர் இருப்பதால் கோடை வெப்பத்தை தணிக்கிறது. அதனால் தான் தர்பூசணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எடை இழப்பு, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் பராமரிப்புக்கு தர்பூசணிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வைட்டமின் ஏ, சி, பி6 போன்றவையும் நிறைந்துள்ளது.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு சில உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. இல்லை என்றால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது.

பால்

ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி மற்றும் பால் ஆகியவை எதிர்ப்பு பொருட்களாகும். பாலில் கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் புரதங்கள் உள்ளன. தர்பூசணி போன்ற அமிலத்தன்மை கொண்ட பழத்தில் புரதம் கலந்தால், அது வயிற்றுப் பிரச்னைகளை உண்டாக்கும்.

புரத உணவுகள்

தர்பூசணி சாப்பிட்ட பிறகு புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். தர்பூசணியில் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. புரதச்சத்து நிறைந்த உணவை உண்பது செரிமான நொதிகளின் உற்பத்தியை பாதிக்கிறது. இது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். தர்பூசணி சாப்பிட்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் இடைவெளி எடுத்து புரத உணவுகளை சாப்பிடுங்கள்.

முட்டை

முட்டைமற்றும் தர்பூசணி இரண்டிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும். புரதத்துடன், முட்டையில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களும் உள்ளன. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம். இப்படி சாப்பிடும் போது இரண்டும் சேர்ந்து ஒருவரையொருவர் ஜீரணிக்காமல் தடுக்கிறது. இது மலச்சிக்கலுடன் கடுமையான வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

தண்ணீர்

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப்படி, தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் இது உங்கள் இரைப்பைக் குழாயில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், நுண்ணுயிர்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், ஆயுர்வேதத்தின் படி இது சாதாரண வாழ்க்கை செயல்முறையை சீர்குலைக்கிறது. அதனால் தர்பூசணி சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. இதை குடித்தால் உடனே அசௌகரியம் ஏற்படும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்