வெள்ளைப்படுதல் பிரச்சினை குழந்தைகளுக்கும் வருமா.. இத்தனை ஆபத்தானதா.. என்ன சொல்றீங்க டாக்டர்!
பல பெண்கள் வெள்ளைப்படுதல் (Leucorrhoea) பிரச்சினையை வெளியில் சொல்ல தயங்குகின்றனர். இதனால் தான் குழந்தை பருவத்தில் இருந்தே பிறப்புறுப்பின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தாய்க்கும் இருக்கிறது.

சமூகத்தில் பெண்கள் தங்களுக்கான பல பிரச்சினைகளை வெளியில் சொல்லுவது இல்லை. பலநேரங்களில் தயக்கப்படுகின்றனர். சில நேரங்களில் கூச்சப்படுகின்றனர். தலைமுறை தலைமுறையாக பெண் சமூகம் இங்கு அப்படிதான் வாழ பழகி உள்ளது. தங்கள் உளவியல் சார்ந்த விஷயங்களை மட்டுமல்ல.. உடல்நலம் சார்ந்த விஷயங்களையும் தான். அப்படியான ஒரு உடல் சார்ந்த பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானது வெள்ளைப்படுதல். பெண்களுக்கு பொதுவாக வெள்ளைப்படுதல் என்று சொல்லக் கூடிய சுகாதார பிரச்சினை பரவலாக உள்ளது. இந்த பிரச்சினை குறித்து மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ஜானகியிடம் பேசியபோது வெள்ளைப்படுதல் குறித்து தெரிவித்த பல தகவல்களையும் தீர்வுகளையும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
பல பெண்கள் வெள்ளைப்படுதல் (Leucorrhoea) பிரச்சினையை வெளியில் சொல்ல தயங்குகின்றனர். இதனால் தான் குழந்தை பருவத்தில் இருந்தே பிறப்புறுப்பின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தாய்க்கும் இருக்கிறது. ஏனென்றால் மறைவிடத்தில் உள்ள பிரச்சினைகளை வெளியே சொல்வதில் உள்ள தயக்கமும், சிகிச்சை எடுத்துக் கொள்வதில் உள்ள அலட்சியமும் நோய் முற்றி விட வாய்ப்பாக அமைகிறது.
வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்?
உடல் எடை குறைதல், பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, சிவத்தல், தடித்தல், நிறமாற்றம், அடி முதுகில் வலி,முடி கொட்டுதல், சாப்பாடு, ஒவ்வாமை போன்ற பல்வேறு அம்சங்களையும் தாய்மார்கள் கவனித்து வரும் போது வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வு காண முடியும்.