‘அம்மு, செல்லம், புஜ்ஜி’ ஆண் குழந்தைகளுக்கு 2024ம் ஆண்டு அதிகம் வைக்கப்பட்ட பெயர்கள் எவை தெரியுமா?
2024ம் ஆண்டில் அதிகம் வைக்கப்பட்ட பெயர் எது?
2024ம் ஆண்டில் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்பட்ட பெயர்கள் என்னவென்று பாருங்கள். இந்த ஆண்டு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர்கள்தான் அதிகம் வைக்கப்பட்டது. இந்த 2024ம் ஆண்டில் மார்டன், அர்த்தமுள்ள மற்றும் பாரம்பரியப் பெயர்கள் என கலவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டன. நாம் இன்னும் சில நாட்களில் புத்தாண்டை வரவேற்க உள்ளோம். இங்கு இந்த ஆண்டு அதிகம் வைக்கப்பட்ட ஆண் குழந்தைகளின் பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரவ்
ஆரவ் என்றால் அமைதியான, சாந்தமான என்று பொருள். ஆரவ் என்ற பெயர் இந்தாண்டு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு இந்தப்பெயரை பெற்றோர்கள் அதிகம் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு இந்தப்பெயரின் எளிமையும், அர்த்தமும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
விஹான்
விஹான் என்றால் விடியல் அல்லது புதிய துவக்கம், விஹான் என்றால் நம்பிக்கை, நேர்மறை எண்ணம் என அர்த்தமுள்ளது. இந்தப்பெயரையும் இந்தாண்டு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அதிகம் தேர்ந்தெடுத்திருந்தனர்.
அதர்வ்
வேதங்களில் இருந்து எடுக்கப்பட்ட பெயர். அதர்வ் என்றால், அறிவாளி மற்றும் ஞானி என்று பொருள். இது பாரம்பரியமான மற்றும் மார்டனான பெயரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் பெற்றோருக்கு ஏற்ற பெயர். இந்த ஆண்டு இந்தப்பெயரையும் பெற்றோர் அதிகம் தேர்ந்தெடுத்திருந்தனர்.
அர்ஜீன்
அர்ஜீன் என்ற பெயர் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயர். இது ஒளிமயமான, வண்ணம் என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப் பெயர் மகாபாரதத்தில் உள்ள ஒரு வீரரை குறிப்பிடும் பெயராகும் என்பதால், இந்தப்பெயர் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர். இந்தப்பெயரை பெற்றோர்கள் எல்லா காலத்திலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இஷான்
இஷான் என்றால் இறைவன் சிவன் என்று பொருள். வடகிழக்கு திசையையும் குறிக்கும். இஷான் என்றால் ஆன்மீக மற்றும் வானத்தில முக்கியமான கிரகங்கள் என்ற அர்த்தத்தைத் தரும். இந்தப் பெயரும் எப்போதும் பெற்றோர் விரும்பும் பெயராகும்.
ஆத்விக்
ஆத்விக் என்றால் தனித்தன்மையான மற்றும் சிறப்பான என்று பொருள். இது ஆழ்ந்த அர்த்தமுள்ள சமகால பெயர்களை விரும்பும் பெற்றோருக்கு ஏற்ற பெயராகும். இந்தப்பெயர் பெற்றோருக்கு எப்போதும் பிடிக்கும் பெயராகும்.
ருத்ரா
ருத்ரா என்றால் இறைவன் சிவனுடன் தொடர்புடைய பெயராகும். ருத்ரா என்பது சக்தியைக் காட்டுகிறது. அர்த்தமுள்ள தேர்வு மற்றும் வலுவான என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.
கியான்
கியான் என்பது மார்டன் மற்றும் டிரண்டில் எப்போதும் இருக்கும் பெயர். இதற்கு கடவுளின் கருணை மற்றும் பழமையான என்று பொருள். இதை ஆன்மீக அழத்துடன், மார்டன் ஸ்டைலுடன் சேர்ந்தது இந்தப்பெயர். இந்தப்பெயரும் பெற்றோரின் தேர்வாகும்.
கபீர்
கபீர் என்பது ஒரு பிரபல கவிஞரின் பெயராகும். கபீர் என்றால், மேன்மையானவர் என்று பொருள். இது ஞானம் மற்றும் பணிவு என்பதை குறிக்கிறது. இந்தப்பெயரை பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.
ஆர்யன்
ஆர்யன் என்றால் போராளி அல்லது உன்னதமானவர் என்று பொருள். ஆர்யன் என்ற பெயரை நீங்கள் எந்த காலத்துக்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். பலம் மற்றும் கவுரவம் என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது இந்தப்பெயர். இந்தப்பெயரும் பெற்றோரின் வழக்கமான தேர்வு ஆகும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்