சப்பாத்தி பிரியரா நீங்கள்? அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை எத்தனை என்று தெரிந்துகொள்ளுங்கள்!
சப்பாத்தி பிரியரா நீங்கள்? அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை எத்தனை என்று தெரிந்துகொள்ளுங்கள். கீழே அதன் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சப்பாத்திக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கோதுமை சப்பாத்திக்களை சாப்பிடுவதால் உங்களுக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? சப்பாத்தி இந்திய உணவுகளில் நீக்கமற இடம்பிடிக்கும் ஒரு உணவு. வடஇந்தியாவில் மிகப்பிரபலம். தென்னிந்தியாவிலும் பிரபலம்தான். இந்த பாரம்பரியமான உணவு, சூப்பர் சுவையானது மட்டுமல்ல, இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காகத்தான் இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழு உணவாகக் கருதப்படுகிறது. நீங்கள் நினைப்பதை விட அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சாப்பாத்திக்களை நாம் ஏன் அதிகம் உட்கொள்ளவேண்டும் என்றும், அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
கார்போஹட்ரேட்
கோதுமை சப்பாத்தியில் எண்ணற்ற கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை நீடித்திருக்க வைக்கின்றன. கோதுமையில் உள்ள எண்ணற்ற கார்போஹைட்ரேட்கள், மெதுவாகி செரித்து, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும். ஆற்றல் திடீரென அதிகரிப்பதை தடுக்கும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
கோதுமை சப்பாத்தியில் உள்ள பெரிய நன்மையே அதில் உள்ள நார்ச்சத்துக்கள்தான். உயர் நார்ச்சத்துக்கள், செரிமானத்தை தூண்டுகிறது. குடலின் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்திகள் ஒரு சிறப்பான தேர்வாகும்.