தலைமுடியை வேகமாக வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? இதோ இந்த குறிப்புகள் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தலைமுடியை வேகமாக வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? இதோ இந்த குறிப்புகள் மட்டும் போதும்!

தலைமுடியை வேகமாக வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? இதோ இந்த குறிப்புகள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Dec 02, 2024 11:15 AM IST

தலைமுடி வேகமாக வளர என்ன செய்யவேண்டும்?

தலைமுடியை வேகமாக வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? இதோ இந்த குறிப்புகள் மட்டும் போதும்!
தலைமுடியை வேகமாக வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? இதோ இந்த குறிப்புகள் மட்டும் போதும்!

சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்

உங்கள் உணவில் வைட்டமின் ஏ, சி மற்றும் டி, சிங்க், பயோடின் போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ஊட்டச்சத்துக்கள் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இது உங்களின் உடலுக்குள் இருந்து ஊட்டமளிக்கிறது.

மசாஜ்

தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் நீங்கள் தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். இது தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே ரோஸ்மேரி மற்றும் புதினா இலைகளை பயன்படுத்தி கூடுதல் பலன்களைப் பெறுங்கள்.

சூட்டை தவிர்க்க வேண்டும்

நீங்கள் தலைமுடியை நேராக்குவதற்கு ஸ்ட்ரைட்னர்களைப் பயன்படுத்துவீர்கள். அதை வைத்து நீங்கள் உங்கள் தலையில் சுருக்கங்களையும் உருவாக்குவீர்கள். இது உங்கள் தலைமுடியை பாதிக்கும். தலைமுடி உடைவதை ஏற்படுத்தும். எனவே நீங்கள் தலைமுடியில் சூடான பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். அப்படி உபயோகிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு பாதுகாப்பு அளித்துவிட்டு உபயோகியுங்கள்.

முடி வெட்டுவதை வழக்கமாக்குங்கள்

6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை உங்கள் தலைமுடியை கட்டாயம் அடிப்பகுதிகளை வெட்டிவிடவேண்டும். இது உங்களுக்கு தலைமுடியின் நுணிகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். உங்கள் தலைமுடியின் நுணிகளில் ஸ்பிளிட் எண்ட்கள் இல்லாமல் இருந்தால், உங்கள் தலைமுடி அடர்ந்து, படர்ந்து வளரும்.

சூரிய ஒளியில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

உங்கள் தலைமுடியை புறஊதாக் கதிர்கள் சேதப்படுத்தும். இதனால் உங்கள் தலைமுடி உடையும் அல்லது வறண்டு போகும். எனவே நீங்கள் தொப்பிகள் அணிந்துகொள்ளுங்கள். புறஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஸ்பிரேகளை வாங்கி பயன்படுத்துங்கள். இவற்றை நீங்கள் வெளியில் செல்லும்போது உபயோகப்படுத்துங்கள்.

இறுக்கமான ஹேர் ஸ்டைல்கள்

போனிட்டெயில் மற்றும் கொண்டை போன்ற இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை தவிருங்கள். இது உங்கள் தலைமுடியை இறுக்கிப்பிடிக்கும். இதனல், உங்கள் தலைமுடி சேதமடையும். எனவே லூஸான ஹேர்ஸ்டெயிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுடியில் உள்ள அழுத்தத்தைப் போக்கும்.

நீர்ச்சத்துடன் இருங்கள்

அதிகளவில் தண்ணீர் பருகுவது உங்கள் தலைமுடிக்கு தேவையான நீர்ச்சத்துக்களைத் தரும். மேலும் நீர்ச்சத்து என்பது உங்கள் தலைமுடியின் நெகிழ்தன்மையை பாதுகாக்க வேண்டியது ஆகும். இதனால் உங்கள் தலைமுடி உடைவது தடுக்கப்படுகிறது.

போதிய உறக்கம்

தரமான உறக்கம் என்பது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. மேலும் இது உங்கள் தலைமுடியை சரிசெய்து, அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறங்குவதை கட்டாயமாக்குங்கள்.

பொறுமை

தலைமுடி வளர்வதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே அவசரமான முடிவுகளை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் தலைமுடி ஆரோக்கிதயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வாருங்கள். முடி வளர்வது தெரிவதற்கு கொஞ்சம் கால அவகாவம் கொடுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.