மழை மற்றும் குளிர் காலத்தில் உடல் எடை அதிகரிப்பை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 29, 2024

Hindustan Times
Tamil

குளிர் காலத்தில் போதிய உடல் செயல்பாடு இல்லாமல் உடல் எடை அதிகரிப்பானது இயல்பாக ஏற்படும்

இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பை தடுத்து ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேனி பாதுக்காகலாம்

குளிர்காலத்தில் வழக்கமான பழக்கவழக்கங்ளை தவிர்க்க கூடாது. வெளிப்புறத்தில் இல்லாவிட்டாலும், உள்புறத்திலும் உடல் கலாரிகளை எரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனான் மனநிலை மாற்றமும்  ஏற்படும்

உணவு சாப்பிடுவதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதன் மூலமும், கார்டிசோல் அளவு அதிகர்ப்பை தடுப்பதன் மூலமாகவும் உடல் எடை அதிகரிப்பை தடுக்கலாம். இதற்கு ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் மனஅழுத்தம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நுட்பத்தை பின்பற்ற வேண்டும்

அதிகப்படியான கலோரிகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக உணவுகளில் சாப்பிடும் பாகங்களில் கவனம் செலுத்தவும்

சமச்சீரான உணவு டயட்டை பின்பற்றவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிதான புரதத்தை சரிவிகித அளவில் சாப்பிட வேண்டும்

பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் தரமான தூக்கத்தை உறுதிபடுத்த வேண்டும்

டிசம்பர் 02-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்