அப்படி இருந்த நான்.. இப்படி ஆகிட்டேனே.. 83 கிலோவில் இருந்து 67 கிலோவாக உடல் எடையைக் குறைத்த இளம்பெண்ணின் டயட் சீக்ரெட்ஸ்
அப்படி இருந்த நான்.. இப்படி ஆகிட்டேனே.. 83 கிலோவில் இருந்து 67 கிலோவாக உடல் எடையைக் குறைத்த இளம்பெண்ணின் டயட் சீக்ரெட்ஸ் குறித்துப் பார்ப்போம்.
உடல் எடையைக் குறைக்க சரியான டயட்டை பின்பற்றுவது மிகவும் முக்கியம். அதைத் தினமும் பின்பற்றுவது அவசியம். எடை இழப்பு பயணத்தில் உணவுக்கட்டுப்பாடு அவசியம். உணவு முன்னெச்சரிக்கைகளுடன், உடற்பயிற்சிகளும் செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையில், சமீபத்தில் 16 கிலோ எடையைக் குறைத்த பாவனா என்னும் இளம்பெண், எவ்வாறு தனது எடையை 83 கிலோவில் இருந்து 67 கிலோவாக குறைத்துள்ளார் எனும் தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பாவனாவின் எடை இழப்பு பயண விவரங்களை அறிந்துகொள்வோம்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பதற்கு முன்பு, பாவனா 83 கிலோ எடையைக் கொண்டிருந்தார். இப்போது அவர் 16 கிலோ எடையைக் குறைந்து 67 கிலோவை எட்டியுள்ளார்.
உணவுக்கட்டுப்பாடு இப்படி தான்:
அவர் தனது உணவுத்திட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவின்படி, பாவனா, காலை 8 மணிக்கு புல்லட் காபி குடித்து தனது நாளைத் தொடங்குகிறார். காலை 11 மணிக்கு சிற்றுண்டி சாப்பிடுவது வழக்கம்.
அப்போது, இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்கிறார். இதில் அரை கப் ஓட்ஸ், ஒரு கப் பால், இரண்டு சியா விதைகள், அரை டீஸ்பூன் கோகோ பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவை இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்டிருக்கு. இவை ஒரு கப்பில் ஊறவைக்கப்பட்டிருக்கும், அதை வெறும் வயிற்றில் குடித்திருக்கிறார், இளம்பெண் பாவனா. மேலும் ஒரு பழக்கிண்ணத்தில் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் ஒன்றை எடுத்துக்கொள்வார். மேலும் பசித்தால், இன்னொரு கிண்ணத்தில், வேர்க்கடலை போன்ற ஏதாவது ஒரு பருப்பினை எடுத்திருக்கிறார். அதுகிடைக்காத நாட்களில், பன்னீர் புர்ஜியை சாப்பிட்டிருக்கிறார், பாவனா.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, பாவனா ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டார். அவர் மூன்று விதமான உணவு விருப்பங்களை வைத்திருந்தார். அதில் அரை கப் தயிர், அவுரிநெல்லிகள் மற்றும் தேன், வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை மதிய உணவாக எடுத்திருக்கிறார். அது கிடைக்கவில்லையென்றால், தாமரை விதைகளைச் சாப்பிடுவார். அதுவும் இல்லையென்றால் எந்தவொரு பழத்தையும் சாப்பிடுவார்.
இரவு உணவு இப்படித்தான்:
இரவு உணவில், வெஜ் உணவு இல்லை என்றால் (புர்ஜி / சாலட் / பன்னீர் கறி), பின்னர் ஒரு நான்-வெஜ் கிண்ணம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அசைவ கிண்ணத்தில் வறுக்கப்பட்ட கோழி இல்லையென்றால் மீன் மற்றும் முட்டையை அளவு உணவாக எடுத்திருக்கிறார்.
இந்த டயட் திட்டத்தை பின்பற்றியதன் மூலம் 16 கிலோ எடை குறைந்துள்ளதாக இளம்பெண் பாவனா கூறுகிறார். இருப்பினும், அவர் ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்தாரா என்பதை வெளிப்படுத்தவில்லை. மேலும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உணவைக் கட்டுப்பாட்டைத் திட்டமிட வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகளும் வித்தியாசமாக இருக்கலாம்.
எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க முடிவு செய்யும் போது, நீங்கள் உற்ற மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும் மற்றும் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
83 கிலோவில் இருந்து 67 கிலோவைப் பெற, இளம்பெண் எடுத்துக்கொண்ட முயற்சி பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது.
டாபிக்ஸ்