Peanut-Coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி; எத்தனை சுவை நிறைந்தது தெரியுமா? அடடா என ருசித்து சாப்டுவீங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peanut-coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி; எத்தனை சுவை நிறைந்தது தெரியுமா? அடடா என ருசித்து சாப்டுவீங்க!

Peanut-Coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி; எத்தனை சுவை நிறைந்தது தெரியுமா? அடடா என ருசித்து சாப்டுவீங்க!

Priyadarshini R HT Tamil
Aug 01, 2024 04:40 PM IST

Peanut-Coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி எத்தனை சுவை நிறைந்தது என்று தெரியுமா, அடடா என ருசித்து சாப்பிடுவீர்கள்.

Peanut-Coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி; எத்தனை சுவை நிறைந்தது தெரியுமா? அடடா என ருசித்து சாப்டுவீங்க!
Peanut-Coconut Chutney : வேர்க்கடலை - தேங்காய் சட்னி; எத்தனை சுவை நிறைந்தது தெரியுமா? அடடா என ருசித்து சாப்டுவீங்க!

வேர்க்கடலை – ஒரு கப்

பச்சை மிளகாய் – 10

பூண்டு பல் – 4

புளி – சிறிதளவு

பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – ஒரு கப்

உளுந்து - ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வரமிளகாய் – 1

பெருங்காய தூள் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து வறுக்கவேண்டும். வேர்க்கடலை வறுபட்டவுடன் அதிலே பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துலிடவேண்டும். பின்னர் பூண்டு, புளி என ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவேண்டும்.

வறுத்த பொருட்களை ஆற விடவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, துருவிய தேங்காய், கல்லுப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவேண்டும். பாதி அரைபட்டவுடன், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வர மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால், சூப்பர் சுவையில், வேர்க்கடலை சட்னி தயார். இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

வேர்க்கடலையின் நன்மைகள்

100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது.

கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.

ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நமது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

கடலை மூளைக்கு மிகவும் நல்லது. இதில் பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு, மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு, வைட்டமின் பி3 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையை பலப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் நினைவாற்றலை பெருகச் செய்கிறது.

கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.

பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது.

இது எனர்ஜி நிறைந்த ஒன்று என்பதால், இது அதிக நேரம் உங்களை திருப்தியாக வைக்கிறது. பசி மேலாண்மைக்கு உதவுகிறது. இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிட்டு உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள புரதம் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது.

கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இது மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலை சட்னியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த சட்னியை சேர்த்து பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.