தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diarrhoea Prevention Tips: அனைத்து வயதினருக்கும் பாதிப்பை தரும் வயிற்றுப்போக்கு - தப்பிக்கும் வழிகள், பாதுகாப்பு முறைகள்

Diarrhoea Prevention Tips: அனைத்து வயதினருக்கும் பாதிப்பை தரும் வயிற்றுப்போக்கு - தப்பிக்கும் வழிகள், பாதுகாப்பு முறைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 19, 2023 12:43 PM IST

பருவமழை காலங்களில் உடலில் நோய் தொற்று பாதிப்பானது எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்படும். குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டால் அதற்கான உடனடி தீர்வாக செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம

வயிற்றுபோக்கு பாதிப்புக்கான தீர்வும், பாதுகாப்பு முறைகளும்
வயிற்றுபோக்கு பாதிப்புக்கான தீர்வும், பாதுகாப்பு முறைகளும்

ட்ரெண்டிங் செய்திகள்

ஏனென்றால் அவர்களின் செரிமான அமைப்பானது முழுமையடையாமல் இருப்பது, பாக்டீரியா, வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் வழிவகுக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மேறகொள்ள வேண்டும்.

பருவமழை காலத்தில் வயிற்றுபோக்கு பிரச்னை ஏற்படுவது ஏன்?

ஈரப்பதம் அதிகரிப்பு, சீதோஷ நிலை மாற்றம், மழை பொலிவு போன்ற பல்வேறு காரணங்களால் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் உருவாகி அவை குடல் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும். கூடுதால் தண்ணீர் மாசுபட்டு அதில் நுண்ணியர்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

செரிமான அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில், மேற்கூறிய நோய் கிருமிகள் தாக்குதலை ஏற்படுத்திகிறது. அத்துடன் செரிமான அமைப்பும், நோய் எதிர்ப்பு அமைப்பும் அதிக அளவிலான ஈரப்பதம், மெலடோனின் அளவுகள் அதிகரிப்பதால் பலவீனமடைகிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும், செரிமான சிக்கல்களும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு வகைகளை மட்டும் குழந்தைகள் உண்பதை உறுதிபடுத்த வேண்டும். சமச்சீரான உணவுகள், குறிப்பாக வைட்டமின், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை உறுதிபடுத்த வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

வயிற்றுபோக்கு ஏற்படுவதை தவிர்க்க குழந்தைகள் டயட்டில் சேர்க்க வேண்டிய சில உணவுகள்

  • இந்த சீசனில் கிடைக்கூடிய அனைத்து பழ வகைகள், கொட்டைகள், விதைகள் போன்றவை அடிப்படையான ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடன்ட்களை தருகிறது
  • புரொ பயோடிக் அதிகம் நிறைந்த உணவுகளை தர வேண்டும். தயிர் போன்றவை ஆரோக்கியமான குடல் அமைப்பை பெற உதவுகிறது
  • வெதுவெதுப்பான, ப்ரஷ்ஷாக சமைத்த உணவை சாப்பிட வேண்டும். பச்சையான, ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
  • பூண்டு, இஞ்சி, சீரகம், மல்லி விதை போன்ற செரிமானத்துக்கு உதவி புரியும் உணவுகளை சமைக்கும் உணவில் சேர்க்க வேண்டும்
  • சுத்தமான தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்த வேண்டும். நீர்இழப்பு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும். இளநீர், மோர், பழ ஜூஸ் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • இதுதவிர, சோப் வைத்து சரியாக கை கழுவதல், சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் பருகுவது, டாய்லெட்டுக்கு பிறகு சுத்தமாக கழுவுவது போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்
  • தெருவோர உணவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் ப்ரஷ்ஷான உணவுகளை சாப்பிட வைக்க வேண்டும்
  • நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அல்லது சுடவைத்து ஆறவைத்த தண்ணீர் குடிப்பதை உறுதி படுத்த வேண்டும்
  • வீட்டின் சுகாதாரத்தை பேனி பாதுகாக்க வேண்டும். குறிப்பாக சமையலை மற்றும் பாத்ரூம் பகுதிகளை நோய் கிருமி அண்டாதவாறு சுத்தமாக வைக்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு பாதிப்பு சில வீட்டு முறை சிகிச்சை

வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உடனடி தீர்வை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். இதற்கு முதன்மையான தீர்வாக ஓஆர்எஸ் எனப்படும் Oral rehydration solution பருகுவதன் மூலம் உடலில் உள்ள நீர்இழப்புகளையும், எலக்ட்ரோலைட்கள் இழப்பையும் சரி செய்து கொள்ளலாம்.

வேக வைத்த உருளை, வேக வைத்த வாழைப்பழம் போன்ற செரிமான பிரச்னை ஏற்படுத்தாத உணவுகளை சாப்பிடலாம். அதேபோல் புரொ பயோடிக் நிறைந்த தயிர் சாப்பிடுவதால் குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியை ஊக்கிவிக்கும்.

மருத்துவர் ஆலோசனை எப்போது பெறலாம்?

வயிற்றுப்போக்கு 2 நாள் வரை நீடித்து, ரத்தம் அல்லது சளி மலம் விழியாக வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்

அதேபோல் நீர்இழப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிப்பு குறைவது, வறண்ட உதடு, தாகம் அளவுக்கு மீறி எடுப்பது, கண்களில் குழி விழுவது, கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்