Dental Care : பூச்சி பற்களால் அவதியா? ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dental Care : பூச்சி பற்களால் அவதியா? ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகள் இதோ!

Dental Care : பூச்சி பற்களால் அவதியா? ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகள் இதோ!

Priyadarshini R HT Tamil
May 14, 2024 01:05 PM IST

Dental Care : பூச்சி பற்களால் அவதிப்படுகிறீர்களா? ஈறுகளில் ரத்தம் வடியும் பிரச்னைகள் இருந்தால், இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Dental Care : பூச்சி பற்களால் அவதியா? ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகள் இதோ!
Dental Care : பூச்சி பற்களால் அவதியா? ஈறுகளில் ரத்தம் வடிகிறதா? இரண்டு எளிய முறை வீட்டு தீர்வுகள் இதோ!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

பல் சொத்தை, ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் வலி போன்றவற்றை உடனடியாக சரிசெய்ய இந்த இரண்டு டிப்ஸ்களும் உங்களுக்கு உதவும்.

டிப்ஸ் – 1

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 5

நல்லெண்ணெய் – கால் ஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயத்தின் தோல்களை உறித்துவிட்டு, கழுவி, உரலில் வைத்து தட்டி சாறு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் 10 சொட்டும், நல்லெண்ணெயில் 5 சொட்டும் எடுத்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இதை பற்களில் வலி உள்ள இடங்களிலும், பூச்சி பற்களின் மீது பஞ்சு வைத்து வைக்கவேண்டும்.

பற்களில் வலி இருக்கும்போதும் செய்யலாம். இது பற்களின் வேர்களில் உள்ள பாதிப்புக்களையும் குணப்படுத்தும். பற்களில் உள்ள கிருமிகள் வெளியேறும்

பற்களின் வலியைப்போக்கி, பூச்சிகளை பக்கத்து பற்களுக்கு பரவவிடாமல் தடுக்கும். மேலும் பற்களில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.

டிப்ஸ் 2

தேவையான பொருட்கள்

கொய்ய இலை – 1

(கொய்யா மரம் இல்லாவிட்டால் கொய்யாப்பழம் விற்பவர்களிடம், இதன் இலைகளை கேட்டுப்பெறலாம்)

செய்முறை

இதை நன்றாக மடக்கி சொத்தை பற்களில் வைத்து கடிக்கவேண்டும். நன்றாக மென்று முதலில வரும் சாறை கீழே துப்பிவிடவேண்டும்.

அடுத்தடுத்து வரக்கூடிய சாறுகளை விழுங்கிக்கொள்ளலாம். நன்றாக பூச்சிபற்களில் வைத்து மெல்ல வேண்டும்.

அவ்வாறு மெல்லும்போது, பற்களில் உள்ள கிருமிகள் முற்றிலும் நீங்கிவிடும். அதனால் ஏற்படக்கூடிய வலி, வீக்கம் என அனைத்தும் குறைந்துவிடும்.

பற்களில் ரத்தக்கசிவு, ஈறுகளில் வீக்கம், சொத்தைப்பல், பற்கள் ஆடுவது என அனைத்தும் சரியாகிவிடும். பூச்சிகள் இருந்தால், அது அடுத்த பல்லுக்கு பரவாது.

பல் வலியால் துடிக்கும்போது, இதுபோல் செய்வது உங்களுக்கு மிகவும் நல்லது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்கள். இனிப்பு சாப்பிட்டவுடன் சிறிது தேங்காய் பற்களை சாப்பிடவேண்டும். அப்போதுதான் பற்களில் கிருமிகள் தங்காது.

இரவு உறங்கச் செல்லும் முன் கட்டாயம் பல் துலக்கவேண்டும். மேலும் இனிப்பு சாப்பிடவுடன் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் சாக்லேட்கள் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிடும்போது கட்டாயம் வாய் கொப்பளிக்கவேண்டும்.

மேலும் வாரத்தில் ஒருமுறை இளஞ்சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினமும் இரவு இதை செய்தாலும் நல்லதுதான். குறிப்பாக குழந்தைகளுக்கு பல் பராமரிப்பு குறித்து சிறுவயது முதலே பழக்கப்படுத்தவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.