தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Pickle: ருசியான பூண்டு ஊறுகாய்.. 6 மாசம் ஆனாலும் கெடாது!

Garlic Pickle: ருசியான பூண்டு ஊறுகாய்.. 6 மாசம் ஆனாலும் கெடாது!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 14, 2023 11:01 AM IST

சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு அட்டகாசமான காமினேஷன்.

பூண்டு ஊறுகாய்
பூண்டு ஊறுகாய்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பூண்டு

நல்லெண்ணெய்

மிளகாய்தூள்

புளி

உப்பு

பெருங்காயம்

கடுகு

வெந்தயம்

வரமிளகாய்

கறிவேப்பிலை

செய்முறை

அரைக்கிலோ பூண்டை நன்றாக உரித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் அரை கப் அளவு நல்லெண்ணெய்யை சேர்த்து உரித்த அரை கிலோ பூண்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும். 
பூண்டு சிவந்து வந்த பிறகு அதை ஒரு பாத்திரத் தில் எடுத்து ஆற விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கொள்ள வேண்டும். 

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு ,ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடுகு வெந்தயம் நன்றாக சிவந்த பிறகு அதை ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இப்போது ஆற வைத்த பூண்டை ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.

 இப்போது ஏற்கனவே பூண்டு வதக்கிய அதே கடாயில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் 5 வரமிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அரைத்து வைத்த பூண்டை சேர்த்து கிளற வேண்டும். 

இப்போது 3 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து கிளற வேண்டும். அதில் புளியை கரைத்து சேர்த்து கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். புளி பச்சை வாடை போன பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து ஏற்கனவே வறுத்த கடுகு வெந்தயத்தை பொடியை அதில் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு ஊறுகாயை இறக்கி வைத்து விடலாம். 

ஊறுகாய் நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது ஜாடியில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். இது சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு அட்டகாசமான காமினேஷன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்