Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி; தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு; சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி; தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு; சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்!

Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி; தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு; சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 10:58 AM IST

Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி, தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு, சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்தான். வடநாட்டு உணவாக இருந்தாலும் அனைவரையும் கவரும் சுவை கொண்டது.

Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி; தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு; சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்!
Dahi Bindi : இந்தியில் தஹி பிண்டி; தமிழில் வெண்டைக்காய் தயிர் கூட்டு; சப்பாத்திக்கு எற்ற சூப்பர் சைட் டிஷ்! (flavours of food)

வெண்டைக்காயின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

அனீமியாவைத் தடுக்கிறது

உடல் எடை குறைப்பில் உதவுகிறது

குடல் புற்றுநோயைத் தடுக்கிறது

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

குறிப்புகள்

வெண்டைக்காயை வாங்கும்போது, அதன் பின்புறம் கிள்ளி, இளம் வெண்டைக்காய்களாக மட்டுமே வாங்கவேண்டும்.

இதை வறுத்து சாப்பிடும்போது உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே வேகவைத்து சாப்பிடவேண்டும்.

இது சாம்பார், சூப், குடைமிளகாயுடன் வறுவல் என பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகிறது.

வெண்டைக்காயை வேகவைக்கும் முன் அதை எண்ணெயில் வறுக்கவேண்டும். அப்போதுதான் அதன் பிசுபிசுப்புத்தன்மை குறையும்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 150 கிராம்

தயிர் – அரை கப்

கடலை மாவு – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சீரகத்தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

செய்முறை

வெண்டைக்காயை கழுவி சிறிது நேரம் காய வைத்து (வெண்டைக்காயை எப்போதும் காய வைத்துவிடவேண்டும். அப்போதுதான் அதில் உள்ள பிசுபிசுப்பு குறையும்) நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து, அதில் கடலைமாவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெண்டைக்காயை வதக்கி தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். பின்னர், அதே கடாயில் மேலும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அடித்து வைத்துள்ள தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதில் வதக்கிய வெண்டைக்காய்களை சேர்க்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான சுவையில் தஹி பிண்டி தயார். இதை சப்பாத்தி, பூரி, ரொட்டி, நாண், குல்சா வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

வெண்டைக்காயின் பிசுபிசுப்புத்தன்டை சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. எனவே அவர்கள் இதுபோன்ற தஹி பிண்டி செய்து சாப்பிட்டால் அதில் உள்ள பிசுபிசுப்பும் தெரியாது. சுவையும் நன்றாக இருக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.