Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!-curry leaves mutton fry chicken fried with curry leaves bursting with delicious flavour - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!

Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Feb 23, 2024 05:30 PM IST

Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!

Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!
Curry Leaves Mutton Fry : கறிவேப்பிலை மசாலா சேர்த்து செய்யும் கோழி வறுவல்! அட்டகாசமான சுவையில் அள்ளும்!

சின்ன வெங்காயம் – 15

பூண்டு – 15

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 3

கொத்தமல்லிப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – ஒரு கப்

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

ஏலக்காய் – 2

கிராம்பு – 3

ஸ்டார் சோம்பு – 1

வர மிளகாய் – 2

மேரியனேசன் செய்வதற்கு

தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

கழுவி சிறுசிறு துண்டுகளாக வைத்துள்ள சிக்கனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக ஊறவிடவேண்டும்.

கறிவேப்பிலை, முழு மிளகு, வரமிளகாய், மல்லித்தூள், முழு கரம் மசாலா பொருட்கள் என அனைத்தையும் கடாயில் சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் ட்ரையான வறுத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை மொறு மொறுவென ஆனவுடன், மற்ற மசாலாக்களும் வறுபட்டிருக்கும்.

இதை எடுத்து நன்றாக ஆறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயத்தில் பாதியை மட்டும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை என அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயங்களை சேர்த்து வதக்க வேண்டும். அவை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டு.ம

அதில் கோழிக்கறியை சேர்க்க வேண்டும். இதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதை மூடி 10 நிமிடங்கள் வேகவிடவேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் இருந்து வெளியேறும் தண்ணீரே போதுமானது.

சிக்கன் வெந்தவுடன், மூடியைத்திறந்துகொள்ள வேண்டும். மசாலாக்கள் நன்றாக ட்ரையாகும் வரை குறைவான தீயில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நல்ல கருமை நிறமானவுடன், சாப்பிடலாம்.

இதை சாதம், சாப்பத்தி, இட்லி, தோசை என எதற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்திற்கு கொஞ்சம் ட்ரையாகவும், டிபஃனுக்கு தண்ணீருடனும் சேர்த்து சமைத்துக்கொள்ள வேண்டும்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.