கறிவேப்பிலை சட்னி; ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க; அத்தனை சுவையானது!
சுவையான கறிவேப்பிலை சட்னி செய்து சாப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் முக்கியமான ஒன்று கறிவேப்பிலை. ஆனால் உணவுடன் சேர்த்து சமைக்கும்போது நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் கறிவேப்பிலை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. கல்லீரலை காக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பக்கவிளைவுகளை தடுக்கிறது. காயங்களை ஆற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிரான உட்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் பயிரடப்படுகிறது. இத்தனை நன்மைகளை அள்ளி வழங்கும் கறிவேப்பிலையில் ஆறுமாதங்கள் வரை கெடாத தொக்கு செய்து வைத்துக்கொள்ள முடியும். அதை சாப்பிட உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளும் கிடைத்துவிடும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 2 கைப்பிடியளவு
வர மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
புளி – சிறிது
பூண்டு – 4 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவேண்டும். அது சூடானவுடன், வரமிளகாய், தேங்காய்த்துருவல், புளி, பூண்டு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் அடுப்பை குறைத்து கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி சிறிது நேரம் ஆறவிடவேண்டும். வறுத்த பொருட்கள் அனைத்துடனும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எஞ்சிய 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து போட்டு பொரிந்தவுடன் சட்னியில் சேர்த்து கலந்து விட்டால் சூப்பர் சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதம், சப்பாத்தி என எதனுடன்வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்