குளிர் காலத்தில் நீங்கள் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குளிர் காலத்தில் நீங்கள் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

குளிர் காலத்தில் நீங்கள் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Dec 05, 2024 09:50 AM IST

கடுகு எண்ணெயை உடலில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

குளிர் காலத்தில் நீங்கள் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர் காலத்தில் நீங்கள் கடுகு எண்ணெயை உடலில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

கடுகு எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ உள்ளதால் அது உங்கள் சருமத்தை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்த காக்கிறது. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்களின் பளபளப்பை குளிர் மாதங்களிலும் தக்கவைத்துக்கொள்கிறது.

தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் நீங்கள் கடுகு எண்ணெயை தடவுவது, உங்கள் தலைமுடி வறட்சி, பொடுகு மற்றும் தலைமுடி உடைதல் போன்றவற்றைச் செய்கிறது. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டத்தைக் கொடுக்கிறது. குளிர் மாதங்களில் தலைமுடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மேலும் தலைமுடிக்கு வலுவையும், பளபளப்பையும் தருகிறது.

தசைவலியில் இருந்து நிவாரணம் தருகிறது

கடுகு எண்ணெயை சருமத்தில் வைத்து மசாஜ் செய்யும்போது, அது சருமத்தின் கெட்டித்தன்மையை இலகுவாக்குகிறது. சருமத்தில் உள்ள டென்சனைக் குறைக்கிறது. இது உங்கள் உடலுக்கு நெகிழ்தன்மையைக் கொடுக்கிறது. உங்களின் அசவுகர்யங்களை இதமாக்குகிறது. உங்கள் தசைகளின் வலிகளைப் போக்குகிறது, குறிப்பாக குளிர் காலங்களுக்கு உதவுகிறது.

உங்கள் சருமத்தை மிருதுவாக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது

கடுகு எண்ணெய் உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. வறட்சி மற்றும் வெடிப்பதை தடுத்து உங்கள் சருமத்தை மிருதுவாக வைக்கிறது. இதுதான் உங்கள் சருமத்தின் பொதுவான பிரச்னையாக குளிர் மாதங்களில் ஏற்படும்.

சரும எரிச்சலைப் இதமாக்குகிறது

உங்கள் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அதை இதமாக்குகிறது. குளிர் காலத்தில் ஏற்படும் வறட்சி ஏற்படுவது இயல்பு. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் குறைத்து, நிவாரணம் கொடுக்கிறது. கடுகு எண்ணெயில் உள்ள நீர்ச்சத்துக்கள், உங்களுக்கு சவுகர்யத்தைக் கொடுக்கிறது, சருமத்தின் மிருதுவாக்குகிறது. குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது.

இறந்த செல்களைப் போக்குகிறது

இது இயற்கையாகவே இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கும் வேலையைச் செய்கிறது. இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கிவிட்டால், அது இதமான சருமம், ஆரேக்கியமான சருமத்தைக் கொடுத்து, பளபளப்பை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை புத்துணர்வுடன் வைத்துக்கொள்கிறது. குளிர் காலத்தில் சருமத்தைப் பளபளப்பாக்குகிறது.

சருமத்தில் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது

கடுகு எண்ணெயை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரித்து, அதனை மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் குளிர் காலம் முழுவதும் காக்கிறது. வறட்சியைத் தடுக்கிறது. சருமத்தை ஊட்டச்சத்துக்களுடன் காக்கிறது. குறிப்பாக குளிர் மாதங்களில் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது.

சரும தொற்றுகளைத் தடுக்கிறது

கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள், உங்கள் சருமத்தை தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கிறது. இது குளிர்காலத்தில் நடக்கும் பொதுவான ஒன்றாகும். சருமம் வறண்டு போவது மற்றும் எரிச்சல் ஏற்படுவது போன்றவை தொற்றுக்களால் ஏற்படும் தொல்லையாகும்.

ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலை வெதுவெதுப்பாக வைக்கிறது

கடுகு எண்ணெயை நீங்கள் குளிர் காலத்தில் உங்கள் உடலில் தடவும்போது, அது உங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குளிரின் குளுகுளு தன்மையில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. இது உங்கள் உடலை சூடாக வைக்க உதவுகிறது. குறிப்பாக குளிர் காலத்துக்கு இதமளிக்கிறது.

இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது

கடுகு எண்ணெயில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள், கடுகு எண்ணெயை நீங்கள் சருமத்தில் பூசும்போது, உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது, சருமத்துக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.