குளிர்காலத்தில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Pexel

By Pandeeswari Gurusamy
Nov 30, 2024

Hindustan Times
Tamil

குளிர்கால நோய்களில் இருந்து விலகி இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இதற்கு பூண்டு பயனுள்ளதாக இருக்கும்.

Pexel

பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Pexel

பூண்டு சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, கொலஸ்ட்ரால் அளவு இயல்பாக இருக்கும்.

Pexel

பூண்டு வீக்கத்தைக் குறைக்கிறது. மூட்டு வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

Pexel

பூண்டு நுரையீரலுக்கும் நல்லது. இதில் உள்ள சத்துக்கள் நுரையீரல் தொற்றுகளை எதிர்த்து போராடும்.

Pexel

பூண்டில் வைட்டமின் சி, பி6, மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு மிகவும் அவசியமானவை.

Pexel

இருப்பினும், அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

Pexel

கிராம்பு தரும் நன்மைகள்