Goat: தனக்குத்தானே சூனியம் வைத்தாரா விஜய்?.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.. வேதனையில் யுவன்! -கோட் பாடல் மோசமானதன் பின்னணி?
Goat: அவரால் இன்னும் நன்றாக மியூசிக் போட முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் பெரிய ஹீரோ படங்கள் என்று வந்து விட்டால், ஒரு சில கட்டுப்பாடுகளிலேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது - கோட் பாடல் மோசமானதன் பின்னணி?
Goat: விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்தப்படத்தின் 3 வது பாடலான ஸ்பார்க் பாடல் அண்மையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தப்பாடல் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், உண்மையில் இந்தப்பாடலுக்கு யுவன் தான் இசையமைத்தாரா என்பது வரை கூட கமெண்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசினார்.
நொந்து போன யுவன்
அவர் பேசும் போது, “ நான் முதன்முறையாக கோட் படத்தின் மூன்றாவது பாடலான ஸ்பார்க் பாடலை கேட்கும் பொழுது, எனக்கும் பிடிக்காதது போலதான் இருந்தது. ஆனால் இரண்டு மூன்று முறை அந்த பாடலை கேட்கும் பொழுது, அந்த பாடல் எனக்கு பிடித்துவிட்டது. ஆனால், பாடல் குறித்து மக்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். அது எல்லாமே யுவனுடைய காதுக்கு சென்று விட்டது. நான் யுவனுடைய நண்பர் ஒருவரிடம் பேசினேன்.
இந்த விஷயத்தால் யுவன் மிகவும் அப்செட் ஆக இருக்கிறார் என்று அவர் கூறினார். இப்படி ஒரு எதிர்ப்பை யுவன் சங்கர் ராஜா இதுவரை பார்த்ததே கிடையாது. அவ்வளவு மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் யுவன் பார்த்து விட்டார். அவருக்கு இதில் மிகப்பெரிய வருத்தம் வந்து விட்டது. ஆனால், இதில் அவருடைய குறையை அவர் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். என்ன என்று விசாரித்தால், ஒரு சூழ்நிலையை கொடுத்து ஒரு டியூனை போட சொல்கிறார்கள். அந்த டியூனை போட்டு யுவன் போட்டு, வெங்கட் பிரபுவுக்கு அனுப்புகிறார் வெங்கட் பிரபு விஜய் அனுப்புகிறார். ஆனால் அந்த டியூனை செலக்ட் செய்யக்கூடிய இடத்தில் விஜய் தான் இருக்கிறார்.
விஜயால் வந்த வினை
5 ட்யூன்களில் இந்த ட்யூன் நன்றாக இருக்கிறது என்று சொன்னதே விஜய் தான் சொல்லி இருக்கிறார். விஜய் சொல்வதைத்தான் நான் செய்திருக்கிறேன். ஆனால் உலகம் என்னை குறை சொல்லிக் கொண்டிருக்கிறது என்று யுவன் வருத்தப்படுகிறாராம். இன்னொரு தகவலையும் அவர் சொன்னார். அது என்னவென்றால், ஸ்டார் படத்தில் யுவனின் இசை நன்றாக அமைந்திருந்தது. காரணம் என்னவென்றால், அதில் அவரை ஃப்ரீயாக விட்டுவிட்டார்கள். அதேபோல அவரை ஃப்ரியாக விடும்பொழுது தான், அவரால் இன்னும் நன்றாக மியூசிக் போட முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் பெரிய ஹீரோ படங்கள் என்று வந்து விட்டால், ஒரு சில கட்டுப்பாடுகளிலேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்